Wednesday, August 13, 2025

சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும்

" ஆக"

உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் அகற்றும் அரசுதான் சமூக நீதி அரசு என்று பிரச்சாரம் செய்து நம் மக்களின் வாக்கு பெற்று ஆட்சி அமைத்த அரசாங்கம்! 


அரசு ஊழியர்களை விட தனியார் ஒப்பந்த ஊழியர்களே சிறப்பாக வேலை செய்வார்கள் என்ற முன்பின் அரசாங்கத்தின் முடிவுகள் எளிய மக்களின் வாழ்வில் கை வைக்கும்.


பேச்சுவார்த்தையில் தனியாரிடம் இருப்பது நலமே, PF, Insurance, பண்டிகை கால பரிசுகள் கிடைக்கும் என்று கூறுவது எவ்வளவு அபத்தம்.


தேர்தல் நேரத்திலும் இவ்வளவு வன்மையாக நடந்து கொள்ளும் அரசாங்கத்திற்கு அந்த தனியார் மூலம் எவ்வளவு கொள்ளை லாபம் வரும் என்பதை யோசிக்க தோன்றுகிறது.


முட்டுக் கொடுப்பவர்கள் அதிமுக அரசாங்கமே இதை கொண்டு வந்துவிட்டது என்று மழுப்பல் பதில்கள் சொல்வது அதே திட்டத்தை ஏன் திமுகவும் பின் தொடர வேண்டும் என்ற எளிய கேள்வியை முன் வைப்பதே இல்லை.


தூய்மை பணியாளராக இருப்பவர்கள் பெரும்பாலும் தலித் மக்களாக இருப்பதே இதற்கு காரணம்!


பொதுவான அமைச்சர் குறிப்பிட்ட மீடியாவின் கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறுவேன்,நீங்க எல்லாம் யார் என்று கேட்பது எத்தகைய ஊடக அறம்?


கூலி திரைப்படத்தை பார்த்தோம் ரசித்தோம் என கருத்து வெளியிடும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூலிக்காரர்களுக்கு மட்டும் மேயர் பிரியாவையும் அமைச்சர் சேகர் பா பாபுவையும் முன்னிறுத்துவது ஏன்?


தலித் மக்கள் சார்ந்த எந்த பிரச்சனையானாலும் குறிப்பிட்ட அமைப்புகள் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்பது போல், சித்தரிக்க நினைப்பது வன்மையாக கண்டனத்திற்கு உரியது.

எப்பொழுதுமே தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறையும் போராட்ட அடக்குமுறையும் மிகக் கொடுமையானதாகவே இருந்து இருக்கிறது. அதற்கு மாற்று சமூகத்தினர் மாற்று சமூக அமைச்சர் குரல் கொடுக்கும் பொழுது முதலமைச்சருக்கு அந்த மக்கள் மீது தரிசனம் இருக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவதும் சாதிய மனநிலை காரணம் அவர்கள் போராட்டம் உரிமைக்கு முதலாளியின் தரிசனத்திற்கு இல்லை உழைப்புக்கேற்ற ஊதியமும் பணி நிரந்தரமும் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நிம்மதியாக சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்! 


-செல்லா செல்லம்

14-08-25




காதலில் விழுவதும் எழுவதும் சகஜமே!

 காதலில் விழுவதும் எழுவதும் சகஜமே!


ஒருவர் மீது காதல் வந்தால் அவரிடம் நீங்களே நேரடியாக வெளிப்படுத்தும் பண்பு மகத்தானது!


அந்த தைரியம் போற்றுதலுக்கு உரியது!


அதேபோல் அந்த நபர் அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் முழு உரிமை பெற்றவர்! அதுவும் போற்றுதலுக்கு உரியது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!


-Sella Sellam









Wednesday, January 22, 2025

கருப்பா அனுப்பி கொஞ்சம்

கருப்ப்பரஅ அனுப்பி கொஞ்சம் கூட்டிவர சொல்லும் ஐயா

கருப்ப்பரஅ அனுப்பி கொஞ்சம் ஏத்தி விட சொல்லும் ஐயா

கருப்ப்பரஅ அனுப்பி கொஞ்சம் ஏத்தி விட சொல்லும் ஐயா

சாமிஈ சாமி சாமி

சாமி சத்தியமா இந்த மலையில் ஏற சக்தி இல்லை ஐய்யப்பா

சாமி சத்தியமா இந்த மலையில் ஏற சக்தி இல்லை ஐய்யப்பா

நானும் ஏறி வருவது எந்தன் புகழில்ல 

உந்தன் கருணை அய்யப்பா...

உந்தன் பெருமை அய்யப்பா...

இன்னும் எத்தன தூரம் அந்த பம்பா என்று கேட்டு வரோம் ஐய்யப்பா...

இன்னும் எத்தன தூரம் அந்த பம்பா என்று கேட்டு வரோம் ஐய்யப்பா...

எருமேலி  எறங்கியதும் என்னமோ சந்தோஷம்

பேட்டத்துள்ளி ஆடும் போது உள்ளுக்குள்ள ஒளி வீசும்

பெரும்பாத தொடங்கும் போது பேரின்பம் உண்டாகும்

நந்தவனம் தாண்டும் போது நம்பிக்கையும் கூடிப் போகும்

அழுதையில குளிக்கும் போது சவுட்ட மனம் ஆவல் கூடும்

அழுத மலை எறும் போது அழுக வந்து அடச்சி போகும்

கரி மலய  கடக்கும்போது  காலு ரெண்டும் கடுத்துப் போகும்

இன்னும் இன்னும் எத்தன தூரம் அந்த பம்பா என்று கேட்டு வரோம் ஐய்யப்பா...

இன்னும் எத்தன தூரம் அந்த பம்பா என்று கேட்டு வரோம் ஐய்யப்பா...

பம்பையில நீராட   மெல்ல மெல்ல பாவம் செல்லும்

நீலிமலை ஏறும் போது  நின்னு நின்னு மூச்சு வாங்கும்

சன்னிதானம் நெருங்கும்போது சட்டுன்னு தான் கோஷம் வரும்

பதினெட்டு படியேற பட்ட துன்பம் எட்ட போகும்

தரிசனம் காணும் போது  வேற என்ன கேட்கத் தோணும்

சாமி சத்தியமா இந்த மலையில் ஏற சக்தி இல்லை ஐய்யப்பா...

நானும் ஏறி வருவது எந்தன் புகழ் இல்ல

உந்தன் கருணை அய்யப்பா...

உந்தன் பெருமை அய்யப்பா...

கருப்ப்பர அனுப்பி கொஞ்சம் கூட்டிவர சொல்லும் ஐயா

கருப்ப்பர அனுப்பி கொஞ்சம் ஏத்தி விட சொல்லும் ஐயா

கருப்ப்பரஅ அனுப்பி கொஞ்சம் ஏத்தி விட சொல்லும் ஐயா


Tuesday, January 21, 2025

First Lover

 காதலி என் முதல் காதலி

 காதலி என் முதல் காதலி

என்னை விட்டு போனாலும் நீயே என் காதலியே என்னை விட்டுப் போனாலும் நீயே என் காதலி!

அதுவே உனக்கு அந்தஸ்து நாளும் நானே உனக்கு பந்தோபஸ்து

என் முதல் காதல நீ தோண்டிவிட்ட

என் காதல் தீய தீண்டி விட்ட

நாம சேர்ந்து வாழ நீ வேண்டிகிட்ட

நான் இறங்கி வந்த நீ ஏண்டி விட்ட 

காதலி என் முதல் காதலி

காதலி என் முதல் காதலி

என்னை விட்டு போனாலும் நீயே என் காதலியே என்னை விட்டுப் போனாலும் நீயே என் காதலி!

அதுவே உனக்கு அந்தஸ்து நாளும் நானே உனக்கு பந்தோபஸ்து..




Saturday, November 30, 2024

இப்பல்லாம் யாருப்பா சாதி பார்க்கிறா?

சாதியை புரிந்து கொள்ளுதலும் சாதி ஒழிப்பு அரசியலும் இருபடிநிலைகள்!

அம்பேத்கரையும் பெரியாரையும் காரல் மார்க்ஸையும் தனித்தனியே என்று சொல்பவர்கள் ஆபத்தானவர்கள். 


மூவரும் சமூக சமனை விரும்பியவர்கள். ஒரே இலக்கை வெவ்வேறு பாதையில் பயணித்தவர்கள். அவ்வளவுதான்.


இப்பல்லாம் யாருப்பா சாதி பார்க்கிறா?  என்று சொல்பவர்களுக்கு சொல்ல வருவது ஒன்றைத்தான். அவர்களுக்கு ஜாதியின் நவீன வடிவம் புரிவதே இல்லை.


அதை புரிந்து கொள்ள அதற்கு முயற்சிப்பதும் இல்லை  என்பதுதான்  பொருள். சாதியத்தை இந்த மாதிரி சொற்றொடர்களில் மறைத்து வைத்து பாதுகாப்பதில் அவர்கள் உதவி செய்பவர்கள்.


உண்மையில் பேதம் இருப்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் இது மாதிரி மழுப்பல் பதில்களுக்கு செல்லவே மாட்டார்கள்.


எந்த வடிவத்தில் அது இருக்கிறது என்பதை பாதிக்கப்பட்டவர் மனதில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.


பாதிக்கப்பட்டவன் சொல்லும் சொற்களை ஆராய்ந்து பார்ப்பார்கள். அது மாதிரி என்ன நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்பதை கடைப்பிடிப்பார்கள். 


நகரமயமாதல ஜாதி  மறைஞ்சிட்டதா  நாம் எடுத்துக்கவே முடியாது. எடுத்துக்காட்டுகள் ஏராளம். நகரமும் வெவ்வேறு வடிவத்தில ஜாதியை புதுப்பித்துக் கொண்டே  இருக்கு.


பொருளாதார வர்க்க வேறுபாட்டால் ஜாதியை ஒழித்து விடலாம் என்பது முடியாத ஒன்றாகவேப்படுகிறது. அதேதான் பாபாசாகேப் அம்பேத்கரும் சாதீயை அழித்தொழிப்பது எப்படி? என்ற உரையில் உறுதியாக கூறுகிறார் . அவரைப் போல் சாதிய படிநிலைகளை, கொடுமைகளை அனுபவித்தவர் உண்டா உண்டென்றாலும் அதை தவிர்க்க போராடியவர்கள் உண்டா? சமூக பண்பாட்டுத்தளத்தில் சீர்திருத்தம் செய்யாமல் ஜாதியை ஒழிக்கவே முடியாது என்பது வாழ்வியல் கூற்று. சாதரணமாக கடந்து விட முடியாது.


 ஜாதியை ஒழிக்காமல் பொருளாதார முன்னேற்றத்தை அடையவே முடியாது.


நில புலங்கள் எல்லாம் சதி செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திலே வைத்திருக்கப்பட்ட நிலையில் எப்படி பொருளாதார சமநிலை செய்ய முடியும் என்பது கேள்விக்குறி.


எதை வைத்து அவர்கள் மேலே வர முடியும் ஜாதியை ஒழிக்க முடியும் என்பது  தீர்க்க யோசிக்க வேண்டிய விஷயம். கல்வி ஒன்றுதான் அவர்களின் ஆயுதமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து பார்த்தால் தான் தெரியும் பாதிக்கப்பட்டவனின் வலி.


மேலிருந்து சொல்வது எல்லாம் வெறும் சொற்களாக மட்டுமே நின்று விடும். செயல்தான் நிச்சயம் மாற்றும். செயலில் இறங்குங்கள். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை. அதற்கு சமூக நீதி கோரும் சமூகங்கள் முதலில் ஒன்றிணைய வேண்டும்.

-Sella Sellam 




கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

 கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்ற மனப் போராட்ட சோதனையை கோயில்களை விட மருத்துவ மனைகள்தான் அதிகம் உசுப்பிவிடுகின்றன!


நூறு புத்தகங்கள் தட்டி எழுப்பும் மனநிலையை ஒருநாள் மருத்துவமனை வாழ்க்கை எழுப்பிவிடுகிறதென்றால், மருத்துவமனைகள்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தவை !


எல்லாம் உயிர் பயம்! 



இறைவன் இருக்கென்று நுழைந்தவன் இல்லை என்கிறான்!

இல்லையென்றவன் இருக்கென்கிறான்!

எத்தனை நம்பிக்கை தடுமாற்றங்கள்!


பாவம் நடுநிலைவாதிகள்தான் , விழிபிதுங்குகிறார்கள் எந்தப்பக்கம் சாய்வதென்று புரியாமல்!


-செல்லா செல்லம்

12-08-2019






Tuesday, April 9, 2024

ஈரோட்டில் பொியாரும் அண்ணாவும் ஒரே வீட்டில் வசித்தார்களா?

பொியார்-அண்ணா நினைவாலயம்: சமன் நாடக அரங்கேற்ற நிகழ்வு-நாடகப்பயணக் கட்டுரை

16-12-2023 அன்று என் முதல் முறைாயன ஈரோட்டுப் பயணம் என்பது எந்த வகையில் முக்கியம் என்பது யாவருக்கும் தெளிவுபடு கூற வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம் பொியாரி்ன் மீதான ஈர்ப்புதான். வேறென்ன இருக்க முடியும். ஆக இரண்டு தினங்கள் நாடகங்கள் நடத்துவதற்கு மூன்று தினங்கள் ஈரோட்டில் தங்கும் படியாக இருந்தது. மூன்று நாட்களும் முக்கிய அனுபவங்களை கொடுத்த நாட்களாக இருந்தன.

பெரியார் பற்றின புத்தக வாசிப்பு, பெரியார் பற்றின பேச்சு என்று தமிழகம் முழுவதும் உலா வந்தாலும் பெரியார் பிறந்த மண்ணில் இருந்து கொண்டு அவரைப் பற்றி வாசிப்பதும் அவரைப் பற்றி பேசுவதும் அவரின் சிந்தனையில் மூழ்கிய நாடகத்தை அரங்கேற்றுவதும் ஒரு வாய்ப்பாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும்.

அரங்க செயல்பாட்டில் ஈரோட்டிற்கு என்று நாடக உலகில் ஒரு தனி இடம் இருப்பதாக என்றும் அறிந்ததே. புராண மறுப்பு, இதிகாச மறப்பு என்று நாடகம் நடத்தப்பட ஈரோட்டில் பிறந்த பொியார் எப்படி காரணமாக இருந்தார் என்பதை எம். ஆர் ராதா அவர்களின் நாடக அனுபவங்களை பற்றி படித்தாலே தொியும்.

சமன் நாடகம் அரங்கேற்றம் செய்வதற்காக சென்னையிலிருந்து ஈரோடு வரை ரயில் வண்டி வழி பயணித்தோம் வந்தோம் சுப்ரபாஷ் செந்தோம் என்று சென்ற முதல் நாளே ஈரோட்டில் பெரியார் நிலையத்தை நோக்கி சென்றோம் அங்கு அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் அப்பா அவருடைய அறிவுரை மற்றும் பெரியார் மன்றம் பெரியார் நினைவாலயம் பற்றின இடங்களை வீரர்களோடு சென்று சுற்றிப் பார்த்ததில் கூடுதல் அனுபவங்களை பெற்றோம். பெரியார் நினைவாலயத்தில் பெரியார் பற்றிய பயன்படுத்தின பொருட்கள் அனைத்தையும் பார்க்கும் பொழுது அனைவரையும் மகிழ்ச்சியூட்டியது நேரில் பார்க்க நினைத்த ஒரு மனிதரை அவர் பயன்படுத்திய பொருட்களை பார்க்கும் பொழுது பூரிப்பூட்டும் விதமாக இருந்தது என்று அனைத்து கலைஞர்களும் கூறியது ஒருமித்த கருத்தாக இருந்தது அனைவரும் வந்து காண வேண்டிய இடமாக இருந்தது அதிலும் குறிப்பாக பெரியார் பிறந்து வளர்ந்த ஒரு பெஞ்ச் மற்றும் வாசித்த புத்தகங்கள் பொருட்கள் என வரிசையாக வைக்கப்பட்டிருந்தது சிறப்பம்சம் பெரியார் அண்ணா நினைவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது எங்களுடன் வந்த தோழர் கண்ணம்மாவிடம் அதைப்பற்றி கேட்ட பொழுது பெரியார் விடுதலை பத்திரிக்கையில் பணியாளராக பணியாற்றிய பொழுது பெரியார் வீட்டின் பின் ஒதுக்குப்புறம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்ததாக காண்பித்தார். ஓர் அழகான வீடு சிறிய அறை சிறிய மேசை நாற்காலி அண்ணா எழுதுவதற்கு என்று ஒரு அறிக்கையின் விளக்கு இருந்தது அண்ணா பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் இருந்தன. எழுத்தாற்றல் மிக்க ஆளுமையும் குடியிருந்த வீட்டை பார்ப்பதில் அளவற்ற மகிழ்ச்சியை அது கொடுத்தது. என்னவோ தொியவில்லை ஒரு தன்னம்பிக்கை உணர்வையும் கொடுத்தது. அடுத்து பெரியார் மன்றத்தின் நிர்வாகி தோழர் அப்பா சண்முகம் அவர்களிடம் பெரியார் குறித்த உரையாடல்களை நிகழ்த்தினோம். என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள் விளக்கம் அளிக்கிறேன் என்று அவரே கூறியது எங்களின் தயக்கத்தை உடைக்க அனைவரும் விரும்பிய கேள்விக் கணைகளை தொடுக்க அவரும் அலுக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தது பொியார் பற்றின புரிதலை எங்களுக்கு அடுத்த கட்ட புரிதலுக்கு வழிவகுத்தது. உரையாடலுக்கும் நன்றி அதை அமைத்துக் கொடுத்த கண்ணம்மாவிற்கும் நன்றி.

முதலாம் நாள் நிகழ்வு நன்றாக நடைபெற்றது. நகைச்சுவை மன்றம் சமன் நாடகம் சுபவீ அவர்களின் திராவிட முழக்க எதற்காக? என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. அனைத்து கலைஞர்களுக்கும் உபசரிப்பும் விருந்தும் நல்ல முறையில் நடைபெற்றது. அந்த வகையில் தோழர் திரு ராஜேந்திர பிரசாத் அவர்களின் விருந்தும் உபசரிப்பும் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் படி இருந்தது. அவரிடம் அன்று இரவு காரல் மார்க்ஸ் உரித்தான வாழ்வியல் வழிகளை அவர் புரிந்து வைத்திருந்த விதம் சமன் நாடகத்தோடு தொடர்புடையதாக கூறி மொத்த நாடக கலைஞர்களிடமும் உரையாடியது மிக்க வலுவானதாக இருந்தது. அடுத்த நிகழ்வு தோழர் மகேந்திரன் அவர்களுடன் நிகழ்த்தப்பட்டது. அடுத்த நாள் காலை நாடகம் சினிமா அரசியல் குறித்தான போக்கு அனுபவ பகிர்வு கலை துறையில் இருப்பவரையும் கலைப்பயணத்தில் இருப்பவரையும் வருமானம் போன்றவற்றிற்கான அடுத்த கட்டத்தை நோக்கி வாதம் நகர்ந்து கொண்டே இருந்தது அனைத்திற்கும் பொறுமையோடும் பொறுப்போடும் பதிலளித்த சிறந்த நாடக களங்களை ஏற்படுத்திக் கொடுத்த தோழர் அவர்களுக்கும் நல்ல நாடகத்தைப் பார்க்க முடிவதையும் அவரின் உச்சகட்ட நாடக ஆர்வம் மற்றும் பெரியார் பற்றின புரிதல்களையும் வெளிப்படுத்தின. இரண்டாம் நாள் நாடகக் கொட்டகையில் நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் முழுவதும் குழந்தைகள் நிரம்பி வழிந்தன. குழந்தைகளுக்காக நாடகம் நடத்துவதும் குழந்தைகள் நாடகத்தில் நடிப்பதும் பங்கு பெறுவதும் நாடகசெயல்பாட்டாளராக இருப்பதும் எனக்கு மிகுந்த ஆர்வத்தை கொடுத்திருந்தது. விசில் பறக்க கைதட்ட ஆரவாரம் பெருக கொண்டாடிய அனைத்து வரவேற்கத் தகுந்த ஒரு விஷயமாக படுகிறது. நாடகம் முடிந்ததும் நாடகம் பற்றின கலந்துரையாடல் கேள்விகள் என எழுத்தாளர் இயக்குனர் மற்றும் நாடக கலைஞர்களுடன் நடைபெற்றது. நம்ம நாடகத்தில் பயன்படுத்தப்பட்ட அத்தனை தலைவர்கள் பற்றியும் தனித்தனியே அவரோடு கலந்துரையாடப்பட்டது.விளக்கம் கொடுக்கப்பட்டது டேவியஸ் வீசோம் பற்றியும் வலது இடதுசாரி சிந்தனை பற்றியும் அம்பேத்கர் பற்றியும் நீண்ட விளக்க உரை கேட்டு வந்திருந்த அனைத்து பார்வையாளர்களும் எழுந்து கேள்வி எழுப்பி உரையாற்றியது தன்ழ்ச்சியும் தாக்கமும் நேரடியாக காணக் கிடைத்தது பெருமை மகிழ்ச்சியும் கூட அடுத்த அடுத்த நாள் நிகழ்வுகளை முடித்துவிட்டு வழக்கம்போல் சென்னை திரும்பினோம். சென்னையில் இருந்து ஈரோடு புறப்பட்ட புகைவண்டி போல் இல்லை எலக்ட்ரிக் ட்ரெயின் போன்று இருக்க சரியான இருக்கை லக்கி வைப்பதற்கு இடம் சரியாக இல்லாததால் பெரிய சாக்கு முட்டைகளில் நான்கு ஐந்து சாக்கு மூட்டைகளில் ப்ராப்பர்டிசை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். நாடக சாமான்களை எடுத்துக் கொண்டு வருவதில் இருந்த சிரமம்தை புதிதாக தப்பட்டமடித்துக் கொள்வதில் ஒன்றும் இல்லை. மத்திய ரயில் நிலையம் சென்னை வந்திரங்கி மெட்ரோ ரயிலில் ஏறிய பொழுது மொத்த மெட்ரோ ரயிலில் இருந்தவரும் எங்களையே நோக்கிய படி இருந்தது. நாங்கள் நகைத்தபடியே மூட்டை மூட்டைகளை மெட்ரோ ரயிலில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்.

அதே ரயிலில் தஞ்சை மண்ணின் மைந்தன் தோழர். மகேந்திரன் ஏறினார். அவர் எங்களை உற்று நோக்கியபடி இருந்தது. என் சகோதரர் திரு சந்தோஷ் செல்லம் அவருடன் மகேந்திரன் அவரின் மூத்த புதல்வர் புகழேந்தி அவர்கள் இணைந்து படித்ததால் அறிமுகப்படுத்திக் கொண்டு சுயவிமர்சனம் செய்து கொண்டோம். நீண்ட நெடிய வாழ்க்கை அந்த 20 நிமிடத்தில் அவரிடம் பகிர்ந்து கொண்ட போது அற்புதமாக இருந்தது. நாடகம் குறித்தான தேவை. நாடக அரங்கம் சென்னையில் அமைக்கப்பட வேண்டிய கருத்து குறித்தான பேச்சு தமிழக அரசிடம் இணைந்து பேசவும் நாடகத்திற்கு சென்று வரவும் பொருட்களை எடுத்து சென்று வரவும் குறிப்பான பாதுகாப்பினை ஏற்படுத்தி தருமாறு அதற்கும் ஏற்பாடு செய்வோம். விரைவில் அலுவலகத்தில் கலந்துரையாடி இதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்றுவோம். நாம் அரங்கேற்றலாம். நாடகம் பற்றிய விமர்சனங்களையும் நாடகத்தின் கருத்துக்களை குறித்தும் அவர் பேசியதும் எங்களுடைய ஒன்பது வருட கலைப்பயணத்தை அவர் பொறுமையாக அமர்ந்து கேட்டதும் அதோடு கலந்துரையாடியதையும் மொத்த ரயில் நிலையமும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை விளக்க உரை முடிந்ததும் அனைவரும் நாடக கலைஞர்களும் அவரை கையெழுத்து கூப்பி பரவசமடைந்ததும் நாடகம் பற்றின அவசியம் குறித்தும் இன்னொரு நிகழ்வில் எழுதுகிறேன். அடுத்தடுத்து பண்ண வேண்டிய நாடகம் நாடகத்தின் அவசியம் பற்றி தெரிந்து கொண்டோம். மொத்த களைப்பில் இருந்த அனைவருக்கும் புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது அவரின் உரைப்பாடு. வடபழனி வந்ததும் நாங்கள் இறங்கினோம். வாழ்த்தி வடிய அனுப்பி வைத்தார் நித்தம் சீக்கிரம் விரைவில் கலை வழி சந்திக்கிறோம் நன்றி வணக்கம். தோழர் மகேந்திரன் ஐயா விரைவில் கலை வழி சந்திக்கிறோம் என்று நன்றி வணக்கம் அனைவரும் எங்களுடன் பேச முற்பட்டு இருந்தார்கள் கலையார்வம் மிக்கவர்கள் ட்ரெயினில் இருந்தது ஆச்சரியமிக்கது தான்.

 

-செல்லா செல்லம்

20-12-23 இரவு 10 மணி







 



சுயப்பரிசோதனை!

சுயப்பரிசோதனை!

சாலை ஓரத்தில் உறங்கும் நபர்களை பார்க்கும்பொழுது என் சகிப்புத்தன்மையின் மீது எனக்கு சந்தேகம் எழுந்து விடுகிறது.


பேரிங்ஆயில் குறைந்த சீலிங் பேன் கொடுக்கும்  கிரீச்ச் கிரீச்ச் சத்தத்தில் உறங்க முடியாமல் இரவு முழுவதும் தவி தவித்ததாக என் நண்பன் கூறுகிறான்.


காலை மாலை இரண்டு வேளையும் சர்ச்சிலும்,  பள்ளிவாசலிலும், திருக்கோயிலிலும் எழுப்பும் ஓசை  தூக்கத்தின் நிம்மதியை குறைக்கிறது என்று   சில நண்பர்களும்  கூறுகிறார்கள்.


தன் கணவன் விடும் கொட்டாவி சத்தம் கொடுமையாய் இருக்கிறது என்கிறார் பெண் ஒருத்தி.


அதிகாலை நேரம் தவறாமல் கூவிய குலசாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலை நேரங்கெட்ட நேரத்தில் கூவிக்கிட்டுன்னு  துடிக்க துடிக்க கழுத்து அறுத்து போட்டார் அந்த கோவக்கார போதை ஆசாமி.


எல்லாரையும் வியப்பாய் பார்த்தாலும்,

என்ன ஆனாலும் என்  நண்பர்கள் சிலரால்  இளையராஜா இசையை கேட்காமல் தூங்க முடியவில்லை.


எனக்கோ எது என்று உத்தேசமாக சொல்ல முடியவில்லை!


இவர்களில் யார் நான்?


அப்பொழுதெல்லாம் என்னை  சுயப்பரிசோதனை செய்ய வேண்டும் என்று  தோன்றிக் கொண்டே இருக்கிறது!


- செல்லா செல்லம்

18-03-24

11:11PM





சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும் " ஆக" உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் ...