முதல் காதலி!
முதல் காதலியின் சாயலைத்
தேடி தேடியே மனைவியை தேர்ந்தெடுப்பதில்
பல ஆண்களுக்கு உண்மையில் திருமணத்
தாமதம் நேர்ந்துவிடுகிறது.
உண்மையில் மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்தவரம் இல்லை.
முறிந்துப் போன, முறித்துப் போன
முதல் காதலி கொடுத்த வரம்.
அம்மா காட்டும் ஒவ்வொரு பெண்ணிடமும்,
அந்த சுருள் முடியை,
அவள் பரந்த நெற்றியை,
அவள் அணியும் உடை மாதிரியை,
அவள் பேசும் சாயலை,
அவள் சிரிப்பின் தெத்துப் பல்லை,
அவள் சங்குக் கழுத்தை,
அதிலாடும் மணியை,
அவள் படர்ந்து குவிந்த நுனி மூக்கை,
அந்த கன்னக் குழியை,
முகம் பூசிய பூதர்மாவை,
முத்தான எழுத்தை,
அவள் படிக்கும் புக்கை,
அவள் ரசிக்கும் ஜோக்கை,
தேகம் வீசிய வாசனைத் திரவியத்தை,
என எல்லாவற்றிற்கும் அவளை
அளவுகோளாக நீட்டும் போதும்,
பெண் பார்த்துவிட்டு அவன் வேண்டாம்
என்று சொல்லிவிட்டு வருகிற பெண்களின் வலியும்,
அவள் அவனை பிரிந்துப்போன பொழுது
கொடுத்த வலியைத்தான்
கிட்டத்தட்ட அவனும்
கடத்தி விட்டு வருகிறான்
என்பது தெரியாமலேயே
போய்விடுகிறது.
அந்த வலியின் அளவு அவர்களை
அவன் எத்தனையாவது மாப்பிள்ளையாக
சந்திக்கிறான் என்பதை பொருத்து மாறும்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு தலையாய் காதல் இருந்திருந்தாலும்
அந்த அளவுகோல் எல்லா ஆண்மகனிடத்தும்
இருந்துவிடுகிறது.
முதல் காதலை, காதலியை கரம்
பிடிப்பவன் அதிர்ஷ்டசாலி,
பாக்கியவான் என்று அவ்வப்போது
அவன் நினைத்துக் கொள்வது
வாடிக்கை. அனிச்சை.
உண்மையில்
அவனுடைய விரக்தி அதில்
ஒளிந்துக் கொண்டு இருக்கிறது!
ஓர் ஆண்மகனின் வயது கடந்து
நடக்கின்ற எல்லா திருமணங்களுக்கும்
தங்கைகளின் திருமணம், ஜாதி, இனம்,
பணம் என்றில்லாமல் இருக்க வாய்புண்டு
என்பதை உணர்ந்து அவனே கண்டுப்பிடித்த
தத்துவம் போல அவ்வப்பொழுது நினைத்து
ரசித்து மகிழ்ந்தான்.
உண்மையில் எந்த பெண்ணும் இன்னொரு
அளவுகோலில் பொருந்தமாட்டாள்!
ஆனால் காதலிக்கப்படும் ஒவ்வொரு
பெண்ணும் அளவுகோலாக மாறிப்போவதுதான்
காதலில் அழகியல் அதிசயம்!
இறுதியில் வயது நிர்பந்தத்தின் பேரில்
சாயலே இல்லாத பெண்ணிடத்தில் சாயலை
கண்டதுமாய் கல்யாணத்தை முடித்து
வைத்தது சமூகமும் அவனது உள்மனமும்!
இல்லையெனில் இன்னமும் சாயல் தேடிக்
கொண்டுதான் இருந்திருப்பான்.
-செல்லா செல்லம்
14-07-20 இரவு:7.30மணி

8 comments:
Muthal variyileye all boys surrender na😅🙌
Simply superb anna❤️
Itha padikum pothu en kadhali mattum than kannu munnadi iruntha.. Super words😍♥️
Nice & true lines Anna 😍
Wow! Very nice Sella mani
Murali N
Very nice 😊 but don't feel Anna 🥺Ya it's all First Love samarpanam 👍❣️
Super 👌👌👌💘💖😘
Nice nalla irruku anna nigha next director tha
Post a Comment