Saturday, December 19, 2020

“கண்டிப்பா கற்பனை திறன் இருந்தா மட்டும் படிங்க!” - Short Story

             “கண்டிப்பா கற்பனை திறன் இருந்தா மட்டும் படிங்க!” 

                       

    என்றும் இல்லாத ஆனந்தமாய் காத்திருந்தான் அவன். கண்களில் ஏதோ ஓர் புத்துணர்ச்சி பரவசமூட்டும் பார்வை, காத்திருக்க மறுக்கம் அவனது கை, கால்கள் என பதட்டத்தோடு, போராடி அமர்ந்திருந்தான். இது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல. இது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல. பலமுறை காத்திருந்த இடம்தான் அது என்றாலும் அவன் காத்திருந்ததிலே இன்றுதான் சற்று பொறுமையாக இருக்கிறான்.


      இருந்தாலும் இன்று சந்திக்க இருப்பது ஏற்கனவே சந்தித்தவர்களில் ஒருவர் அல்லர். இதுவரை சந்தித்திடாத ஒரு புதுமுகம். எனவேதான் இந்த எதிர்பார்ப்பும் படப்படப்பும் அவனிடம் இருந்தது என்றாலும் சொல்கிற மிகைப் பொய்யாகிவிடக்கூடும். அதெல்லாம் கிடையாது. இங்கு வந்தாலே அவன் அப்படித்தான். இருந்தாலும் இன்று என்றும் இல்லாத அளவிற்கு, ஆர்ப்பரிப்பு மட்டும் அதிகம்.


    மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிய அவன் குடி, சாப்பாடு என எல்லாம் முடித்துவிட்டு 8 மணிக்குத்தான் இங்கு வந்து சேர்ந்தான். இப்போது மணி 8.20 ஆயிற்று. காத்திருந்த பொறுமையிழந்த அவன், குடித்து கொஞ்சம் மிச்சமிருந்த பாட்டிலையும் காலி செய்துவிட்டான். பின், சிகரெட்டை கையிலெடுத்தான். அவசரத்தை அதில் காட்டி காட்டி, இதுவரை பத்து சிகரெட் பாதிவரைதான் புகைக்கப்பட்டு கீழே கிடந்தன. தற்போது கையிலிருப்பது பதினொன்றாவது. அவனுக்கு ஒரு நம்பிக்கை சிகரெட்டை புகைத்தால் மனம் சாந்தி அடைந்துவிடும் என்று. அந்தளவிற்கு தன்னுடைய அமைதி என்ற அழகிய, விலையில்லா ஒரு உணர்ச்சியை சிகரெட்டிடம் அடமானம் வைத்திருந்தான் அவன். எல்லாம் மனதின் காரியம் என்பதில் அவனுக்கு நம்பிக்கையில்லை. அதானால்தான் அத்தனை சிகரெட்டுகளில் அவன் அமைதியை தேடிப்பார்த்தான்.


  சரி, அதை புகைத்துக் கொண்டே அருகிலுள்ள அறையின் சுவர்களின் மீது ஏதேதோ கிறுக்கி இருப்பதை கையால் தடவி ஒவ்வொன்றாக படிக்க முயன்றான். கடந்த முறை வந்தபோது அதில் அவனும் கிறுக்கியிருந்தான். அதைத்தான் தேடுகிறான் போலும்! ஏதோ ஒரு இடத்தில் கையை நிறுத்தி பழைய நினைவுக்குள் ஆழ்ந்தான். மனதிற்குள் சந்தோ~ம். சிறிது நேரம் அப்படியே நின்று புன்னகைத்தான். இவ்வாறாக சுய நினைவை மீறி இருந்த அவனை, கையிலிருக்கும் சிகரெட் துண்டு சுட்டு, அவனை நிகழ்காலத்திற்கு இழுத்தது. அட! அந்த சிகரெட்டுதான் முழுசாய் முடியும் பாக்கியத்தை பெற்றிருந்ததுப் போல! உடனே அனிச்சையில் சிகரெட்டை கீழே போட்டான். பின் அதை தேடி, காலால் தேய்த்து, அணைத்தான். பின் ஜன்னலைத் திறந்து வெளியில் தென்படும் காட்சிகளில் மனதை பாய விட்டான். நகரத்தின் மொத்த வேகமும் கண்களுக்கு புலப்பட்டது. இவன் இந்த அறையில் முடங்கிவிட்டாலும், உலகம் இயங்கிகொண்டுதான் இருக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது. கொஞ்ச நேரத்தில் பல்வேறு காட்சிகளை ஜன்னலின் வழியே பார்த்துவிட்டான் போலும். மீண்டும் அசையாமலேயே சிறிது நேரம் நின்றான்.


    அப்போதுதான் அந்த கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே அங்கிருந்து வேகமாக அசைந்தான். மனமும் உடலும் ஒரு வேகமாக எப்படித்தான் செயல்பட்டதே தெரியவில்லை. இருப்பினும் வெகு நேரம் காத்திருக்க வைத்த சத்தமல்லவா? “கதவு தொறந்துதான் இருக்கு. உள்ளே வா” என்றான்.


    அதற்கு அந்த குரல், “இல்ல, லைட்ட ஆஃப் பண்ணுங்க உள்ள வரேன்.”என்றது. அவனுக்கு ஆச்சரியம். இதுவரை அவன் சந்தித்தவர்களில் இப்படியொரு பதிலை அவன் யாரிடமும் கேட்டதில்லையே! சரி என்று மின்விளக்கை அணைத்துவிட்டு, சாவித்துளையின் வழியே கண்களை வைத்து அவளை வெளி வெளிச்சத்திலேயே மனப்பாடம் செய்தான். என்ன அழகு! 36 வயசு; தலைநிறைய மல்லிகைப் பூ; கட்டுடல் மேனி அங்க அடையாளங்களை மனப்பாடம் செய்து கொண்டு கண்ட உருவத்தை நினைவில் நிறுத்திய படியே கதவைத் திற்ககலானான்.  அன்ன நடையோடு உள்ளே அவள் நுழைந்ததும் கதவை சாத்தினான். ஒரே இருட்டு. ஆம் காரிருள். ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியவில்லை. பின்வாக்கிலே சென்று அள்ளி அணைத்தனர். உச்சி முகர்ந்து, பெயரைக் கேட்டான். 


    “பாக்கியலெட்சுமி” என்றாள்.

“அப்போ எனக்குதான் இன்னிக்கு பாக்கியம்”; என்றான். அவ்வளவுதான். கிர்ரென்ற சத்தம். அதிர்ந்தான். மெல்ல நிதானிக்க அவன் பாக்கெட்டிலிருந்த தொலைப்பேசியின் சத்தம். “அட!” என்று சொல்லிவிட்டு அவசரமாக சைலன்ட் மோடில் பொட்டு அருகிலிருந்த மேஜையில் தூக்கிப் போட்டான். அதற்குள் அவள் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.


   பின் அருகே சென்று அவளை அணைக்க யத்தனித்hன், யோவ் என்ன விட ஒனக்கு வயசு கம்மியா இருக்கும் போலயிருக்கு” என்றாள். அவள் அவனுக்கு 30 வயதுதான் அந்த இருளில் மதிப்பிட்டிருந்தாள். அவன் அதற்கு பதில் சொல்ல முற்படவில்லை. நிலைமையிலும் இல்லை. இறுக அணைத்தான். இந்த முறை போனுக்கு பதில் அவள் “ஐயோ” என்று கதறினாள். கையில் அணிந்திருந்த ராசி கல் பதித்த தங்க மோதிரம் அவள் மீது பதிந்து ஏற்படுத்திய வலி என்பதை உணர்ந்த அவன் உடனே எழுந்து மோதிரம், ஜெயின், பணம், குருமாத்து என தொந்தரவாய் பட்டதெல்லாம் அவசரமாய் கழற்றி, மேஜையில் வைத்துவிட்டு, அருகே சென்று லீலையை தொடர்ந்தான்.


    அப்புறம்…. குசும்பு. ஒரே இருட்டு, சென்சார் கட்டு. பொழுது விடிந்தது. மணி சரியாக ஏழு. காலை சூரியன் மூடிமயிருந்த ஜன்னலின் கதவுகளை முட்டிக்கொண்டு வந்து அவனுக்கு பொழுது புலர்ந்ததை உணர்த்தினான். முழுக்களைப்பில் இருந்தவன், அரை நிர்வாணமாகத்தான் இருந்தான். மெல்ல எழுந்து கண்களை கசக்கி கொண்டே கழிவறைக்குள் நுழைந்தான். காலைக்கடன்களை முடித்து வந்தவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. கண்களை அனிச்சையாக கூட அசைக்க முடியாத அளவிற்கான கோபம். மேஜையில் வைத்திருந்த சில ஆயிரம் பணம், மோதிரம், ஜெயின், குருமாத்து என எதுவும் இல்லை. அவளும் இல்லை. அவன் எழும்போது அவள் அங்கு இருந்தாக ஓர் காட்சிப்பிழையாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டான். அதற்கு முன்பே அவள் சென்றிருக்க கூடும் என்று நினைத்துக் கொண்டான். போன் மட்டும் தனியாக இருந்தது. ஏன் அதை மட்டும் விட்டு சென்றாள் என்பது அவனுக்கு அடுத்த கேள்வியாக தொடர்ந்தது. யோசித்தான். விளங்கசியபாடில்லை, யோசனைதான் தொடர்ந்துக் கொண்டே இருந்தது. முடிவு அழுகலும் ஆத்திரமும் பொத்துக் கொண்டு வந்தது.


    நொடிப்பொழுதில் ஃபோனை புரோக்கருக்கு போட எத்தனிக்க, விடிய விடிய கிட்டத்தட்ட ஐம்பது பத்து பதினைந்து மிஸ்டு கால்கள். எல்லாம் அவனது தாயிடமிருந்து வந்திருந்தன. சரியென அவனது அம்மாவுக்கே ஃபோனை அடித்தான்.


    ஃபோனை எடுத்ததும் அவனது தாய், “எங்கடா போய் தொலைச்ச, இன்னிக்கு ஒனக்கு பொண்ணு பார்க்க போவனும். நாங்க பொண்ணு வீட்டுக்கு போயிடுறோம். நீ நேரா அங்க வந்துடு. அப்புறம் நல்ல சட்டையா போட்டுக்கிட்டு, இன் பண்ணிக்கிட்டு வாடா. ஒம் போட்டாவ புரோக்கர் காமிச்சிட்டாரம்டா. அந்த பொண்ணும் ஓகே சொல்லிட்டாங்;. ஜோசியர் நாளைக்கே தட்டமாத்தி வச்சிட்டு வந்துடுலான்னுதான். வயசு 42 ஆயிடுச்சு. ஞாபகம் இருக்கா இல்லையா, இப்படியே ஊர் சுத்திக்கிட்டு கெடக்கலாம்னு பாத்தியா. இனிமே ராவுலாம் சுத்த முடியாது. இதையும் விட்டுடோம்னா வேற பொண்ணே கிடைக்காதுடா. இத்தன வயசு மாப்பிள்ளைய அவங்க ஒத்து கிட்டதே பெரிய வி~யம். வந்த வாய்ப்ப விட்டுறக் கூடாதுடா. அட்ரஸ் மெஸேஜ் பண்ணியிருக்கன் பாருடா” என்றபடியே ஃபோனை வைத்துவிட்டாள். அவனை எதுவுமே பேசவிடவில்லை. 


    அவசர அவசரமாக சட்;டையை போட்டு கொண்டு மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான். லாட்ஜின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவனது பைக்கின் மீது ஏறி அமர்ந்து வண்டியின் கிக்கரை கடுப்போடு உதை;தான். வண்டி ஸ்டார் ஆக மறுத்தது. மறுபடியும் உதைத்தான். உதைத்தான். உதைத்தான். பலனில்லை. எப்படி வண்டி ஸ்டார்ட் ஆக அனுமதிக்கும்? வண்டியில் சாவியை போட்டால்தானே? இல்லையென்றால், ம்ஹீம். அப்போதுதான் சுதாரித்தான். யோசித்து பாக்கெட்டுகளில் கைகளைவிட்டு துலாவினான். இல்லை. மறுபடியும் யோசனை. வண்டியிலிருந்து கீழிறிங்கி மீண்டும் படியேறி அறைக்கு ஓடினான். தேடினான். கட்டிலுக்கடியிலெல்லாம் புகுந்து பார்த்தான். கிடைக்கவேயில்லை. மீண்டும் சந்தேகம் வந்தது அவள் மேல். கோபமும்தான். அதற்குள் அடுத்த ஜோடி. வெளியே வர வேண்டிய நிர்பந்தம். வந்தான். தலையில் ஒரு கை இடுப்பில் ஒரு கை. ஏதேதோ முனு முனுத்துக் கொண்டான். அதற்குள் எதிரே புரோக்கர் கையில் அவன் தேடும் சாவியை சுற்றிக்கொண்டே, “நேத்து ராத்திரி அவ்வளவு அவசரமா வண்டியில சாவியக்கூட எடுக்காம வந்துட்டீங்க” என்றான். அப்பாடா! அவனுக்கு நிம்மதி பிறந்தது. சிரித்துக் கொண்டான். புரோக்கர் சிரிக்கவில்லை. 


    “கண்ணா பார்ட்டி எப்படி?” என்றான் புரோக்கர். அப்போதுதான் அவனுக்கு அவளின் ஞாபகம் வந்தது. சட்டென சாவிiயை பிடிங்கியவன் நடந்தவற்றை கோபமாக கூறினான். நடந்ததன் விளைவுகளை உணர்ந்த புரோக்கர் ஐயோ! என்பதன் குறயீடாக தலையின் மேல் இரு கைகளையும் வைத்தபடி அவன் சொல்வதையே கவனிக்க, “மரியாதையா நைட்டுக்குளள் எல்லாத்தையும் வாங்கி குடுத்துடு. மொவன இல்ல… அவளுக்கும் இருக்கு” என்று முகத்திற்கு நேராக ஆட்காட்;டி விரலோடு சாவியையும் சேர்த்து ஆட்டிவிட்டு வேகமாக படியிறங்கியதுதான் தாமதம் பைக் வேகமாக பறந்தது.


    நல்லவேளை! அந்த புரோக்கர் தலைக்கு மேல் கையை தூக்கியதால் தப்பித்தான். இல்லையெனில் அவனோட மோதிரம் புரோக்கர் கையில் இருப்பதை பார்த்திருந்தான் அவ்வளவுதான். அது புரோக்கனுக்கு அவள் கொடுத்த கமி~ன். அது இவனோட மோதிரம்தான்னு புரோக்கனுக்கு அப்போதுதான் புரிந்தது. உடனே ஃபோனை அவளுக்கு அடித்தான். சுவிட்ச் ஆஃப்.


    அதற்குள் அவன் சென்று குளித்து முடித்துவிட்டு பெண் வீட்டை நோக்கி விரைந்தான். வாசலிலேயே காத்துக் கொண்டிருந்த அம்மா அவனுடைய கைகளைப் பிடித்தபடி, “சீக்கிரம் வாடா. உனக்குத்தானே பொண்ணுப்பாக்க வந்துருக்கோம். எல்லாத்துலயும் அப்பன மாதிரியே அலட்சியம். எல்லாரும் உனக்காக காத்துக்கிட்டு இருக்காங்க பாரு” என்று உள்ளே அழைத்து சென்று அவனுக்கான இருக்கையில் அமரவைத்தாள்.


    “அப்புறம் என்ன? அதான் மாப்பிள்ளை வந்தாச்சு பொண்ண அழைச்சிட்டு வாங்க” என்றார் ஒரு முதியவர். உடனே பெண் தட்டில் காஃபி டம்ளருடன் வெளியே வந்து, அனைவருக்கும் காஃபியை கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள். அவன் அவளுக்கு 30 வயதை மதிப்பிட்டான். உள்ளே செல்லும்வரை காஃபி டம்பளரில் தன் முகம் மறைந்துவிடும் என்று முழுசாய் நம்பி டம்ளரில் முகம் மறைத்து உள்ளே சென்று பெண் மறையும்வரை பார்த்துக் கொண்டே இருந்தான். அது அனைவருக்கும் அப்பட்டமாக தெரிய பெண்மணி ஒருத்தி, “மாப்பிள காப்பி சூடா இருக்கா, வேணும்னா இன்னொரு டம்ளர எடுத்துட்டு வர சொல்லுட்டா. பொண்ண… ஆத்திக்க. ஆத்திக்க.” என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டாள். அது அவனுக்கும் புரிந்துவிடவே, “இல்ல… இல்ல…” என்று அதரிப்பதரி மெல்ல காஃபியை குடித்து முடித்தான். பின் அவனது தாயிடம் “அம்மா! பொண்ணுக்கு வயசு அதிகமா இருக்கும் போலருக்கே” என்று காதில் முணு முணுத்தான். அவன் எதிர்பார்த்ததோ இருபத்தியாறு.


    “மாப்ள என்ன சொல்றாரு?” என்று பெண் வீட்டார் ஒருவர் கேட்க, அதற்குள் அவன் அம்மா சாமர்த்தியமாக பேச்சை மாற்றி, “தட்ட மாத்திக்கலாமா?” என்றாள். “இல்ல மாப்பிள்ளை எதோ சொன்னாரே… என்ன மாப்பிள்ளை?” என்று அவனையே கேட்டார் அவர். இல்லை என்ற தயக்கத்துடன் அவன் சொல்ல ஆரம்பிப்பதற்குள், அவன் தாய் குறுக்கிட்டு, “அவனுக்கு 40 வயசாச்சே. பொண்ணுக்கு சம்மதமான்னு கேட்கிறான்.” என்று மறுபடியும் சமாளித்தாள். அவனுக்கு திடுக்கிட்டது. திடீரென சபையில் அவன் வயதை போட்டு உடைத்தால் திடுக்கிடாமல் என்ன செய்யும் பின்னே? “ச்சே… ச்சே… பொண்ணுக்கு முப்பத்தெட்டுங்கும் போது நாற்பது வயசு மாப்பிள்ளைதான சரியா இருக்கும்.” என்றார் கூட்டத்தில் ஒரு பெரியவர். உறைந்தே போய்விட்டான். தான் மதிப்பிட்ட வயதைவிட பெண்ணுக்கு வயது அதிகமாயிருந்ததும், இருக்கையிலிருந்து அசைந்து அசைந்து நகர்ந்து பெண்ணை மறுபடியும் பார்த்துவிட முற்பட்டான்.


    உடனே அருகிலிருந்த பெரியவரு “ஏன் மாப்பிள்ளை நெளியுறாரு?” என்றதும், “ஒன்னுமில்லை” என்று சமாளித்தான். மறுபடியும் யோசனை. தன்னிலை மறந்துவிட்டான். “சரி தட்டமாத்திக்கலாமா” என்றார் ஒருவர். “கொஞ்சம் பொறுங்க. ஒரு பத்து நிமி~ம் பார்ப்போம்” என்றார் இன்னொருவர். நல்ல நேரத்திற்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்று அவனும் கையிலிருந்து கடிகாரத்தை உத்து உத்து பார்த்துக் கொண்டு “எனக்கு இந்து நிச்சயம் மட்டும் நடந்தா இன்னியோட எனக்கு கெட்ட நேரம்தான். அதுக்கு எதுக்குட நல்ல நேரமெல்லாம் பாக்குறீங்க” என்று மனதுக்குள் முணு முணுத்தான். அனைவரும் காத்திருந்தனர். ஐந்து நிமிடந்தான். அதற்குள் ஏதோ ஒரு ஆட்டோ வரும் சத்தம் மட்டும் கேட்டது. யரோ ஒருத்தி சர்ரென உள்ளே வந்து, கையிலி கொண்டு வந்த பையிலிருந்து பழங்களை எடுத்து தாம்புலத்தில் அடுக்கிவிட்டு மேலே மாப்பிள்ளைக்கு முறைப்படி அவனது அம்மா பேசியிருந்த நகைகளை வைத்தாள். அவனது அம்மாவிற்கு அந்த நகைகளை பார்த்ததுமே வாய் ஊற ஆரம்பித்துவிட்டது. 


    உடனே தன்னிலை மறந்திருந்தவனை அம்மா தொட்டு அழைக்க துடித்தெழுந்தவுடனேயே தட்டிலிருந்த நகைகளைதான் பார்த்தான். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. நேற்று பறிக்கொடுத்த அதே ஜெயின். அதே குருமாத்து. சற்று தலையை அப்படியே மேல தூக்க, டடன்… டடன்… டடன்... இடி! “எங்கேயோ பார்த்த மயக்கம்” என்ற பாடல் ஒரு போனில் ரிங் வேறு அடித்தது. ஐயோ! அவன் நேற்றிரவு சந்தித்த அதே முகம். உண்மையில் மயக்கமே வருவது போல் இருந்தது. இருந்தாலும் நேற்று இருந்ததோ நல்ல போதையில் வேறு. எப்போதுமே போதையில் செய்கின்ற செய்கை அனைத்தும் அவனுக்கு முன் ஜென்ம நினைவுதான். ஆனாலும் அதிர்ச்சியால் பிரம்மை பிடித்ததுப் போல் அவளை உறுதிப்படுத்திக் கொள் சந்தேகத்துடன் உற்று நோக்கும் போதே, அருகிலிருந்த ஒரு பெண்மணி, “பாக்கியம் நைட்டு ஃபுல்லா எங்க போன? நேத்து சாந்தரம் ஏழு மணிக்கு அவசர அவசரமா வெளியில போயிட்டு வரேன்னு கிளம்புன. கொஞ்சமாச்சும் பொறுப்பு வேணாம். இப்பத்தான் வர்ற. பாவம் ஒங்க வீட்டுகாரரு ஒண்டியா தவிச்சிப் போய்ட்டாரு. ஒம் ஒரே பொண்ணோட நிச்சயதார்த்தம்னா ஊர் பங்க~னுக்கு வர்ற மாறி ஆடி அடங்கி வர்றியே” என்றாள்.


    பெயரைக் கேட்டதுமே தூக்கி வாரிப் போட்டது. ஆனாலும் அவள்தான் என்று ஊர்ஜிதப்படுத்தும் போராட்டத்தில் நகம் பல்லுக்கு இறையானது. யோசனை நிற்கவே இல்லை. “ இது அதுமாதிரி குடும்பமா இருக்குமோ, அதனாலதான் அந்த பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையோ,  ஆனா பாக்கியலெட்சுமிய பார்த்த்h வயசு கம்மியா தெரியுதே,”. ஒரே யோசனை. அதற்குள் அவனது அம்மா அருகில் பேசியதே அவனுக்கு பதிலாக அமைந்தது. “அவங்களுக்கு பதினெட்டு வயசிலேயே கொழந்த பொறந்திருச்சான். பார்க்க பொண்ணுக்கு அக்கா மாதிரி இல்ல. அவுங்க அப்பாவுக்குத்தான் வயசு வித்தியாசம் கொஞ்சம் அதிகமாம்” என்றாள்.


    பாக்கியலெட்சுமி அவனை பார்த்து “தம்பி வணக்கம்” என்று சொல்லிவிட்டு நடுவில் போய் அமர்ந்தாள். வழக்கமான அரசியல்வாதியைப் போல தாமதத்திற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டாள். இவ்வளவு நிகழ்விற்கு இடையிலும் எதுவும் பேசாமல் வாயில் கொழ கொழவென்று வெற்றிலையைப் போட்டு கொண்டு தாம்புலத் தட்டில் பழங்களை அடுக்கி கொண்டிருந்த அந்த பெரியவரின் அருகில் அவள் உரசு அமர்ந்த போதுதான் அவனுக்கு புரிந்தது. அந்த பெரியவர்தான் அவனுடைய வருங்கால மாமானார் என்று. குழம்பி யோசித்துக் கொண்டே எழுந்து நின்றான். “அருகிலிருந்த ஒருத்தி என்னப்பா பொண்ணுக்கிட்ட தனியா பேசனுமா?” என்றாள்.


    அவன் நிதானமாக, “இல்ல நான் பொண்ணோட அம்மா கிட்டத் தனியா பேசனும்” என்றான். மனதில் உள்ளதைத்தான் சொன்னான். உண்மையைத்தான் சொன்னான். அதற்குள் ஒருவர் அவன் கிண்டல் பண்ணுவதாகவே எண்ணி, “மாப்பிள்ளைக்கு தமாசப் பாரு” என்று கூற அனைவரும் வயிறு குலுங்க சிரித்தும் முடித்தனர்.


    பாக்கியலெட்சுமி அவனை அடையாளம் கண்டுக்கொண்டாளா இல்லையா என்பதே அவனுக்கு தெரியாமல் முழிக்க, அதற்குள் பாக்கியலெட்சுமி மாப்பிள்ளை கையில் அவனைவிட்டு நேற்றிரவு பிரிந்த அதே குருமாத்தை மாட்ட, அந்த பெரியவரின் ஜெயினை போட்டுவிட நிச்சயதார்த்த பத்திரிக்கை உரக்க வாசிக்கப்பட்டது. 


    “உயர்திரு. சிதம்பரநாதன்-சீதா தம்பதியரின் தவப்புதல்வன் கண்ணனுக்கும், உயர்திரு. பரசுராமன்-பாக்கியலெட்சுமி தம்பதியரின் தவப்புதல்வி ராமலெட்சுமிக்கும் ஆவணி திங்கள் பத்தாம் தேதி திருமணம் என்று பெரியோர்களால் நிச்சயக்கப்படுகிறது. சுபம்.”


    அவளுக்கு உண்மையிலேயே அவனை அடையாளம் தெரியலயா? இல்லை நடிக்கிறாளா? ஒத்து உருவம் உடையவளை சந்தித்திருப்பானோ? காட்சிப்பிழையா? அதுசரி அது என்னவோ இருக்கட்டும். அன்று நடந்த நிச்சயதார்த்தம் மட்டும் கல்யாணத்தில் முடியவில்லை என்பது நடந்த உண்மை. இடையில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கு.



-செல்லா செல்லம்

20-10-15 இரவு 10.30



இந்த சிறுகதை உங்களுக்குள் உணர்த்தும் கருத்துக்களை, கீழே உள்ள "Comment box"இல் பகிரவும்.  இந்த சிறுகதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவும் என்று தோன்றினால்,  தவறாமல் பகிரவும். நன்றி!!! 


1 comment:

Nidharsan udhaya said...

Induce Creativity... 💥

சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும் " ஆக" உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் ...