Saturday, November 30, 2024

இப்பல்லாம் யாருப்பா சாதி பார்க்கிறா?

சாதியை புரிந்து கொள்ளுதலும் சாதி ஒழிப்பு அரசியலும் இருபடிநிலைகள்!

அம்பேத்கரையும் பெரியாரையும் காரல் மார்க்ஸையும் தனித்தனியே என்று சொல்பவர்கள் ஆபத்தானவர்கள். 


மூவரும் சமூக சமனை விரும்பியவர்கள். ஒரே இலக்கை வெவ்வேறு பாதையில் பயணித்தவர்கள். அவ்வளவுதான்.


இப்பல்லாம் யாருப்பா சாதி பார்க்கிறா?  என்று சொல்பவர்களுக்கு சொல்ல வருவது ஒன்றைத்தான். அவர்களுக்கு ஜாதியின் நவீன வடிவம் புரிவதே இல்லை.


அதை புரிந்து கொள்ள அதற்கு முயற்சிப்பதும் இல்லை  என்பதுதான்  பொருள். சாதியத்தை இந்த மாதிரி சொற்றொடர்களில் மறைத்து வைத்து பாதுகாப்பதில் அவர்கள் உதவி செய்பவர்கள்.


உண்மையில் பேதம் இருப்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் இது மாதிரி மழுப்பல் பதில்களுக்கு செல்லவே மாட்டார்கள்.


எந்த வடிவத்தில் அது இருக்கிறது என்பதை பாதிக்கப்பட்டவர் மனதில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.


பாதிக்கப்பட்டவன் சொல்லும் சொற்களை ஆராய்ந்து பார்ப்பார்கள். அது மாதிரி என்ன நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்பதை கடைப்பிடிப்பார்கள். 


நகரமயமாதல ஜாதி  மறைஞ்சிட்டதா  நாம் எடுத்துக்கவே முடியாது. எடுத்துக்காட்டுகள் ஏராளம். நகரமும் வெவ்வேறு வடிவத்தில ஜாதியை புதுப்பித்துக் கொண்டே  இருக்கு.


பொருளாதார வர்க்க வேறுபாட்டால் ஜாதியை ஒழித்து விடலாம் என்பது முடியாத ஒன்றாகவேப்படுகிறது. அதேதான் பாபாசாகேப் அம்பேத்கரும் சாதீயை அழித்தொழிப்பது எப்படி? என்ற உரையில் உறுதியாக கூறுகிறார் . அவரைப் போல் சாதிய படிநிலைகளை, கொடுமைகளை அனுபவித்தவர் உண்டா உண்டென்றாலும் அதை தவிர்க்க போராடியவர்கள் உண்டா? சமூக பண்பாட்டுத்தளத்தில் சீர்திருத்தம் செய்யாமல் ஜாதியை ஒழிக்கவே முடியாது என்பது வாழ்வியல் கூற்று. சாதரணமாக கடந்து விட முடியாது.


 ஜாதியை ஒழிக்காமல் பொருளாதார முன்னேற்றத்தை அடையவே முடியாது.


நில புலங்கள் எல்லாம் சதி செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திலே வைத்திருக்கப்பட்ட நிலையில் எப்படி பொருளாதார சமநிலை செய்ய முடியும் என்பது கேள்விக்குறி.


எதை வைத்து அவர்கள் மேலே வர முடியும் ஜாதியை ஒழிக்க முடியும் என்பது  தீர்க்க யோசிக்க வேண்டிய விஷயம். கல்வி ஒன்றுதான் அவர்களின் ஆயுதமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து பார்த்தால் தான் தெரியும் பாதிக்கப்பட்டவனின் வலி.


மேலிருந்து சொல்வது எல்லாம் வெறும் சொற்களாக மட்டுமே நின்று விடும். செயல்தான் நிச்சயம் மாற்றும். செயலில் இறங்குங்கள். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை. அதற்கு சமூக நீதி கோரும் சமூகங்கள் முதலில் ஒன்றிணைய வேண்டும்.

-Sella Sellam 




No comments:

சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும் " ஆக" உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் ...