Tuesday, April 9, 2024

சுயப்பரிசோதனை!

சுயப்பரிசோதனை!

சாலை ஓரத்தில் உறங்கும் நபர்களை பார்க்கும்பொழுது என் சகிப்புத்தன்மையின் மீது எனக்கு சந்தேகம் எழுந்து விடுகிறது.


பேரிங்ஆயில் குறைந்த சீலிங் பேன் கொடுக்கும்  கிரீச்ச் கிரீச்ச் சத்தத்தில் உறங்க முடியாமல் இரவு முழுவதும் தவி தவித்ததாக என் நண்பன் கூறுகிறான்.


காலை மாலை இரண்டு வேளையும் சர்ச்சிலும்,  பள்ளிவாசலிலும், திருக்கோயிலிலும் எழுப்பும் ஓசை  தூக்கத்தின் நிம்மதியை குறைக்கிறது என்று   சில நண்பர்களும்  கூறுகிறார்கள்.


தன் கணவன் விடும் கொட்டாவி சத்தம் கொடுமையாய் இருக்கிறது என்கிறார் பெண் ஒருத்தி.


அதிகாலை நேரம் தவறாமல் கூவிய குலசாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலை நேரங்கெட்ட நேரத்தில் கூவிக்கிட்டுன்னு  துடிக்க துடிக்க கழுத்து அறுத்து போட்டார் அந்த கோவக்கார போதை ஆசாமி.


எல்லாரையும் வியப்பாய் பார்த்தாலும்,

என்ன ஆனாலும் என்  நண்பர்கள் சிலரால்  இளையராஜா இசையை கேட்காமல் தூங்க முடியவில்லை.


எனக்கோ எது என்று உத்தேசமாக சொல்ல முடியவில்லை!


இவர்களில் யார் நான்?


அப்பொழுதெல்லாம் என்னை  சுயப்பரிசோதனை செய்ய வேண்டும் என்று  தோன்றிக் கொண்டே இருக்கிறது!


- செல்லா செல்லம்

18-03-24

11:11PM





No comments:

சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும் " ஆக" உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் ...