ஆகப் பெரும் சுயநலவாதி நான்!
திரும்பிப் பார்க்கிறேன்!
ஆகப் பெரும் சுயநலவாதி நான்.
எல்லாம் நினைவாய் போனப்
பிறகே கொண்டாடப் பழகி இருக்கிறேன்.
அவர்கள் அப்படி இப்படி என்று!
நினைவுகள் எனக்கும் மட்டுமே சுகம்
தரக்கூடியவை.
நிகழ்ந்தபோது அதைப் பற்றி
கருத்தில் கொள்ளாமல் இருந்திருக்கிறேன்.
நான் ஆகப் பெரும் சுயநலவாதி.
ஒருவாட்டி கூட என் தவறை ஒப்புக்
கொண்டவனாய் இருந்ததில்லை.
மனமாறப் பாராட்டியதில்லை.
மனமுருகி மன்னிப்புக் கேட்டதில்லை.
மனமுருகி மன்னிப்பு கேட்டுவிட்டால்
இவ்வளவு பாரம் குறையும்
என்று தெரிந்திருந்தால்
எப்போதே கேட்டிருப்பேன்.
இன்று அவர்கள் இல்லாமல் போனபோது
கிடைக்கிறது அந்த ஞானம்!
-செல்லா செல்லம்
19-03-24
11:11PM

No comments:
Post a Comment