பொியார்-அண்ணா நினைவாலயம்: சமன் நாடக அரங்கேற்ற நிகழ்வு-நாடகப்பயணக் கட்டுரை
16-12-2023 அன்று என் முதல் முறைாயன ஈரோட்டுப் பயணம் என்பது எந்த வகையில் முக்கியம் என்பது யாவருக்கும் தெளிவுபடு கூற வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம் பொியாரி்ன் மீதான ஈர்ப்புதான். வேறென்ன இருக்க முடியும். ஆக இரண்டு தினங்கள் நாடகங்கள் நடத்துவதற்கு மூன்று தினங்கள் ஈரோட்டில் தங்கும் படியாக இருந்தது. மூன்று நாட்களும் முக்கிய அனுபவங்களை கொடுத்த நாட்களாக இருந்தன.
பெரியார் பற்றின புத்தக வாசிப்பு, பெரியார் பற்றின பேச்சு என்று தமிழகம் முழுவதும் உலா
வந்தாலும் பெரியார் பிறந்த மண்ணில் இருந்து கொண்டு அவரைப் பற்றி வாசிப்பதும்
அவரைப் பற்றி பேசுவதும் அவரின் சிந்தனையில் மூழ்கிய நாடகத்தை அரங்கேற்றுவதும் ஒரு வாய்ப்பாகவே
இருந்தது என்று சொல்ல வேண்டும்.
அரங்க செயல்பாட்டில் ஈரோட்டிற்கு என்று நாடக உலகில் ஒரு தனி இடம் இருப்பதாக என்றும் அறிந்ததே. புராண மறுப்பு, இதிகாச மறப்பு என்று நாடகம் நடத்தப்பட ஈரோட்டில் பிறந்த பொியார் எப்படி காரணமாக இருந்தார் என்பதை எம். ஆர் ராதா அவர்களின் நாடக அனுபவங்களை பற்றி படித்தாலே தொியும்.
சமன் நாடகம் அரங்கேற்றம் செய்வதற்காக சென்னையிலிருந்து ஈரோடு வரை ரயில் வண்டி வழி பயணித்தோம் வந்தோம் சுப்ரபாஷ் செந்தோம் என்று சென்ற முதல் நாளே ஈரோட்டில் பெரியார் நிலையத்தை நோக்கி சென்றோம் அங்கு அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் அப்பா அவருடைய அறிவுரை மற்றும் பெரியார் மன்றம் பெரியார் நினைவாலயம் பற்றின இடங்களை வீரர்களோடு சென்று சுற்றிப் பார்த்ததில் கூடுதல் அனுபவங்களை பெற்றோம். பெரியார் நினைவாலயத்தில் பெரியார் பற்றிய பயன்படுத்தின பொருட்கள் அனைத்தையும் பார்க்கும் பொழுது அனைவரையும் மகிழ்ச்சியூட்டியது நேரில் பார்க்க நினைத்த ஒரு மனிதரை அவர் பயன்படுத்திய பொருட்களை பார்க்கும் பொழுது பூரிப்பூட்டும் விதமாக இருந்தது என்று அனைத்து கலைஞர்களும் கூறியது ஒருமித்த கருத்தாக இருந்தது அனைவரும் வந்து காண வேண்டிய இடமாக இருந்தது அதிலும் குறிப்பாக பெரியார் பிறந்து வளர்ந்த ஒரு பெஞ்ச் மற்றும் வாசித்த புத்தகங்கள் பொருட்கள் என வரிசையாக வைக்கப்பட்டிருந்தது சிறப்பம்சம் பெரியார் அண்ணா நினைவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது எங்களுடன் வந்த தோழர் கண்ணம்மாவிடம் அதைப்பற்றி கேட்ட பொழுது பெரியார் விடுதலை பத்திரிக்கையில் பணியாளராக பணியாற்றிய பொழுது பெரியார் வீட்டின் பின் ஒதுக்குப்புறம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்ததாக காண்பித்தார். ஓர் அழகான வீடு சிறிய அறை சிறிய மேசை நாற்காலி அண்ணா எழுதுவதற்கு என்று ஒரு அறிக்கையின் விளக்கு இருந்தது அண்ணா பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் இருந்தன. எழுத்தாற்றல் மிக்க ஆளுமையும் குடியிருந்த வீட்டை பார்ப்பதில் அளவற்ற மகிழ்ச்சியை அது கொடுத்தது. என்னவோ தொியவில்லை ஒரு தன்னம்பிக்கை உணர்வையும் கொடுத்தது. அடுத்து பெரியார் மன்றத்தின் நிர்வாகி தோழர் அப்பா சண்முகம் அவர்களிடம் பெரியார் குறித்த உரையாடல்களை நிகழ்த்தினோம். என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள் விளக்கம் அளிக்கிறேன் என்று அவரே கூறியது எங்களின் தயக்கத்தை உடைக்க அனைவரும் விரும்பிய கேள்விக் கணைகளை தொடுக்க அவரும் அலுக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தது பொியார் பற்றின புரிதலை எங்களுக்கு அடுத்த கட்ட புரிதலுக்கு வழிவகுத்தது. உரையாடலுக்கும் நன்றி அதை அமைத்துக் கொடுத்த கண்ணம்மாவிற்கும் நன்றி.
முதலாம் நாள் நிகழ்வு நன்றாக நடைபெற்றது. நகைச்சுவை மன்றம்
சமன் நாடகம் சுபவீ அவர்களின் திராவிட முழக்க எதற்காக? என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. அனைத்து
கலைஞர்களுக்கும் உபசரிப்பும் விருந்தும் நல்ல முறையில் நடைபெற்றது. அந்த வகையில்
தோழர் திரு ராஜேந்திர பிரசாத் அவர்களின் விருந்தும் உபசரிப்பும் அனைவருக்கும்
நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் படி இருந்தது. அவரிடம் அன்று இரவு காரல் மார்க்ஸ்
உரித்தான வாழ்வியல் வழிகளை அவர் புரிந்து வைத்திருந்த விதம் சமன் நாடகத்தோடு
தொடர்புடையதாக கூறி மொத்த நாடக கலைஞர்களிடமும் உரையாடியது மிக்க வலுவானதாக
இருந்தது. அடுத்த நிகழ்வு தோழர் மகேந்திரன் அவர்களுடன் நிகழ்த்தப்பட்டது. அடுத்த
நாள் காலை நாடகம் சினிமா அரசியல் குறித்தான போக்கு அனுபவ பகிர்வு கலை துறையில் இருப்பவரையும்
கலைப்பயணத்தில் இருப்பவரையும் வருமானம் போன்றவற்றிற்கான அடுத்த கட்டத்தை நோக்கி
வாதம் நகர்ந்து கொண்டே இருந்தது அனைத்திற்கும் பொறுமையோடும் பொறுப்போடும்
பதிலளித்த சிறந்த நாடக களங்களை ஏற்படுத்திக் கொடுத்த தோழர் அவர்களுக்கும் நல்ல
நாடகத்தைப் பார்க்க முடிவதையும் அவரின் உச்சகட்ட நாடக ஆர்வம் மற்றும் பெரியார்
பற்றின புரிதல்களையும் வெளிப்படுத்தின. இரண்டாம் நாள் நாடகக் கொட்டகையில்
நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் முழுவதும் குழந்தைகள் நிரம்பி வழிந்தன. குழந்தைகளுக்காக
நாடகம் நடத்துவதும் குழந்தைகள் நாடகத்தில் நடிப்பதும் பங்கு பெறுவதும் நாடகசெயல்பாட்டாளராக
இருப்பதும் எனக்கு மிகுந்த ஆர்வத்தை கொடுத்திருந்தது. விசில் பறக்க கைதட்ட ஆரவாரம்
பெருக கொண்டாடிய அனைத்து வரவேற்கத் தகுந்த ஒரு விஷயமாக படுகிறது. நாடகம்
முடிந்ததும் நாடகம் பற்றின கலந்துரையாடல் கேள்விகள் என எழுத்தாளர் இயக்குனர்
மற்றும் நாடக கலைஞர்களுடன் நடைபெற்றது. நம்ம நாடகத்தில் பயன்படுத்தப்பட்ட அத்தனை
தலைவர்கள் பற்றியும் தனித்தனியே அவரோடு கலந்துரையாடப்பட்டது.விளக்கம்
கொடுக்கப்பட்டது டேவியஸ் வீசோம் பற்றியும் வலது இடதுசாரி சிந்தனை பற்றியும்
அம்பேத்கர் பற்றியும் நீண்ட விளக்க உரை கேட்டு வந்திருந்த அனைத்து
பார்வையாளர்களும் எழுந்து கேள்வி எழுப்பி உரையாற்றியது தன்ழ்ச்சியும் தாக்கமும்
நேரடியாக காணக் கிடைத்தது பெருமை மகிழ்ச்சியும் கூட அடுத்த அடுத்த நாள் நிகழ்வுகளை
முடித்துவிட்டு வழக்கம்போல் சென்னை திரும்பினோம். சென்னையில் இருந்து ஈரோடு
புறப்பட்ட புகைவண்டி போல் இல்லை எலக்ட்ரிக் ட்ரெயின் போன்று இருக்க சரியான இருக்கை
லக்கி வைப்பதற்கு இடம் சரியாக இல்லாததால் பெரிய சாக்கு முட்டைகளில் நான்கு ஐந்து
சாக்கு மூட்டைகளில் ப்ராப்பர்டிசை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். நாடக சாமான்களை
எடுத்துக் கொண்டு வருவதில் இருந்த சிரமம்தை புதிதாக தப்பட்டமடித்துக் கொள்வதில்
ஒன்றும் இல்லை. மத்திய ரயில் நிலையம் சென்னை வந்திரங்கி மெட்ரோ ரயிலில் ஏறிய
பொழுது மொத்த மெட்ரோ ரயிலில் இருந்தவரும் எங்களையே நோக்கிய படி இருந்தது. நாங்கள்
நகைத்தபடியே மூட்டை மூட்டைகளை மெட்ரோ ரயிலில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்.
அதே ரயிலில் தஞ்சை மண்ணின் மைந்தன் தோழர். மகேந்திரன் ஏறினார். அவர் எங்களை
உற்று நோக்கியபடி இருந்தது. என் சகோதரர் திரு சந்தோஷ் செல்லம் அவருடன் மகேந்திரன்
அவரின் மூத்த புதல்வர் புகழேந்தி அவர்கள் இணைந்து படித்ததால் அறிமுகப்படுத்திக்
கொண்டு சுயவிமர்சனம் செய்து கொண்டோம். நீண்ட நெடிய வாழ்க்கை அந்த 20 நிமிடத்தில்
அவரிடம் பகிர்ந்து கொண்ட போது அற்புதமாக இருந்தது. நாடகம் குறித்தான தேவை. நாடக
அரங்கம் சென்னையில் அமைக்கப்பட வேண்டிய கருத்து குறித்தான பேச்சு தமிழக அரசிடம்
இணைந்து பேசவும் நாடகத்திற்கு சென்று வரவும் பொருட்களை எடுத்து சென்று வரவும்
குறிப்பான பாதுகாப்பினை ஏற்படுத்தி தருமாறு அதற்கும் ஏற்பாடு செய்வோம். விரைவில்
அலுவலகத்தில் கலந்துரையாடி இதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்றுவோம். நாம்
அரங்கேற்றலாம். நாடகம் பற்றிய விமர்சனங்களையும் நாடகத்தின் கருத்துக்களை
குறித்தும் அவர் பேசியதும் எங்களுடைய ஒன்பது வருட கலைப்பயணத்தை அவர் பொறுமையாக
அமர்ந்து கேட்டதும் அதோடு கலந்துரையாடியதையும் மொத்த ரயில் நிலையமும் திரும்பிப்
பார்த்துக் கொண்டிருந்தது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை விளக்க உரை முடிந்ததும்
அனைவரும் நாடக கலைஞர்களும் அவரை கையெழுத்து கூப்பி பரவசமடைந்ததும் நாடகம் பற்றின
அவசியம் குறித்தும் இன்னொரு நிகழ்வில் எழுதுகிறேன். அடுத்தடுத்து பண்ண வேண்டிய
நாடகம் நாடகத்தின் அவசியம் பற்றி தெரிந்து கொண்டோம். மொத்த களைப்பில் இருந்த
அனைவருக்கும் புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது அவரின் உரைப்பாடு. வடபழனி
வந்ததும் நாங்கள் இறங்கினோம். வாழ்த்தி வடிய அனுப்பி வைத்தார் நித்தம் சீக்கிரம்
விரைவில் கலை வழி சந்திக்கிறோம் நன்றி வணக்கம். தோழர் மகேந்திரன் ஐயா விரைவில் கலை
வழி சந்திக்கிறோம் என்று நன்றி வணக்கம் அனைவரும் எங்களுடன் பேச முற்பட்டு
இருந்தார்கள் கலையார்வம் மிக்கவர்கள் ட்ரெயினில் இருந்தது ஆச்சரியமிக்கது தான்.
-செல்லா செல்லம்
20-12-23 இரவு 10 மணி


