“ரம்பா ரகசியம்”
செல்லா செல்லம்
பனிரெண்டாம் வகுப்பு கோடைவிடுமுறைக்காக அவன் அத்தை வீட்டிற்கு சென்றிருந்த சமயம். முதன் முதலில் அவளை அங்குதான் சந்தித்தான். பார்த்தவுடனேயே அவனுக்கு மிகவும் பிடித்துதான் இருந்தது. அவளைப் பார்த்த யாருமே ஒரு கணம் அவளை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு அழகு. நிறம் சுத்த சிவப்பு; கண்களில் இயற்கையாகவே மை வரைந்தாற்போல் மற்றவரை மயக்கும் கருப்பு நிற தூரிகை; கொழுக்கு மொழுக்கென்று உடல்வாகு நடக்கும் போது உடலசைவிற்கு ஏற்ப ஆடி ஆடி, ஏறி இறங்கும் பின்புறம் ; குறித்து முடித்தவுடன் நெற்றியில் வைத்து ஒழுகி இருக்கும் குங்குமம்; கழுத்தில் தொங்கும் தங்க நிற சங்கிலி; நீண்டுத் தொங்கும் மார்பகம் என பார்ப்பவரை இழுக்கும் வண்ணமாகவே இருக்கும் அவளுடைய அனைத்து உடற்கூறுகளும், செயல்களும். அவற்றுள் பெயர் மட்டும் என் விதிவிலக்கா? கொஞ்சம்கூட குறைவில்லாமல் வானத்து தேவதை ரம்பையுடன் அழகில் போட்டி போடும் வகையில் ‘ரம்பா’ என்றே வைத்திருந்தனர். ஒருவேளை அவளது தொடையைப் பார்த்துதான் அந்தப் பெயரை வைத்திருப்பார்களோ என்றுக்கூட அவன் அடிக்கடி எண்ணுவது உண்டு. மனதிற்குள் சிலிர்த்துக்கொள்வதும் உண்டு. அவள் இன்னும் வயதிற்கு வந்துவிட்டாளா என்றக்கூட சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவளின் தோற்றம் இரண்டுக் குழந்தைகளுக்கு தாயானவள் மாதிரிதான் இருக்கும்.
அவனுடைய துரதிர்~;டம் அவள், அவனுடைய அத்தை வீட்டில் இல்லை. இருந்தி;ருந்தால் பழகுவதற்கு அவனுக்கு மிகவும் சுலபமகா போயிருக்கும். அத்தை வீட்டிற்கு எதிர் வீடானா ராதா அக்கா வீட்டில் இருந்தாள். இருந்தாலும் ராதா அக்காவும் அவனுக்கு ஒருவிதத்தில் சொந்தம்தான் என்பதில் அவனுக்கு ஒரு ஆறுதல். அவனுடைய துரதிர்~;டம் அதை;தைக்கும் ராதாவிற்கும் நடந்திருந்த வழக்கமான சின்னஞ்சிறு குழாயடி சண்டைகள் காரணமாக ராதாவீட்டிற்கு நேரடியாக போக முடியாமல் அவனைத் தடுத்தன.
அவன் வந்த நாளிலிருந்து, அவள் அவனுத கண்களில் படாத நாட்களே கிடையாது என்று சொல்ல வேண்டும். அந்தளவிற்கு குளத்திற்குச் சென்றால் குளம், வயலுக்குச் சென்றால் வயல் என்று பின்தொடர்பவள் மாதிரியே வந்துவிடுவாள். ஆனால் எப்பொழுதும் அவளும் ராதா அக்காவின் மகன் விஜயபாலன் அல்லது ராதா அக்காவோ இருப்பதால் அவன் வெறும் ஆசைப் பார்வையை மட்டும் வீசிவிட்டு சென்றுவிடுவான். அவளும் அவனைப் பார்ப்பாள். இவனளவுக்கு ஈர்ப்போடு பார்த்தாலா என்பது கணிப்பது சிரமமாகத்தான் இருக்கும். இப்படியே நாட்களும் கடந்தன.
ஒருநாள் அவன் அவனது அத்தையின் பையன்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக வீட்டிற்குத் தெரியாமல் வயலுக்குச் சென்றிருந்தான். ‘தெரியாமல்’ என்று கூறுவதன் காரணம் அவனது அத்தை மிகவும் கண்டிப்பானவள். ‘தன் நாத்தானார் மகனை கண்டபடி வெளியில் அழைத்துக் கொண்டு செல்லாதீர்கள்’ என்று தன் பிள்ளைகளைக் கண்டித்து, அவனை அவவூருக்கு வந்தாலே வெளியில் விடமாட்டாள். அப்படி இருக்கையில் அவர்கள் அவனை அவளுக்குத் தெரியாமல் அழைத்துச் சென்றுதான் விளையாடுவார்கள். எவ்வளவு நாள்தான் வீட்டை சுற்றியே விளையாடுவது! கிளம்பிவிட்டார்கள், குளத்திற்கும் வயலுக்கும்! குளியலை முடித்துவிட்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தனர். அவன் களப்பணி மேற்கொண்டான். அத்தை மகன் வீரா பந்தை நாலாப்புறமும் அடித்துவிலாச அவனால் ஓடித்தான் பந்தை பொறுக்க முடியவில்லை. அந்தளவிற்கு அடிக்கிறான். விளையாட்டு சூடுப்பிடித்துவிட்டது.
சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்கும்போதே ஒரு ஆச்சரியம். அந்தப் பக்கத்தில் சொல்லி வைத்த மாதிரியே விஜயபாலனும் ரம்பாவும் வந்துவிட்டனர். ரம்பாவை தனியாக விட்டுவிட்டு விஜயபாலன் ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டான். அவளைப் பார்த்ததும் அவனுக்கு ஆட்டமே புரியவில்லை. அதைப் பயம் என்று சொல்வதா இல்லைவேறு என்ன உணர்ச்சி என்று சொல்வதா அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. சொல்லி வைத்தாற்போல அடுத்தப் பந்தை வீரா அவள் இருக்கும் இடத்தை நோக்கி அடித்தான். வெகுநாளாக தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு, இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அருகில் பார்ப்பதற்கு. பக்கத்தில் அத்தை பையன்கள் இருப்பதாலும் ஒருவித துணிச்சல் பிறந்தது அவனுக்கு.
மனதைத் துணிவுப்படுத்திக் கொண்டு ஓடினான் அருகில், மெல்ல அவள் மீது கைகள் உரச குனிந்து பந்தை கையில் தொட்டான். ஆ! அவ்வளவுதான் அதுவரை அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென அவன் பக்கம் முகம் திரும்பினாள். அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. இவ்வளவு நெருக்கத்தில் அவளை அவன் பார்த்ததே இல்லை. எல்லாம் தூரத்துப் பார்வைதானே! அடுத்து அவளது கண்களை பார்த்து என்னவென்று யோசிப்பதற்குள் என்னன்னவோ நடந்துவிட்டது.
கண்கள் இருட்டின. கைகள் நடுங்கின. நெஞ்சம் வேறு படபடக்க ஆரம்பித்துவிட்டது. சிறிது நேரத்தில் அவனது அத்தை மகன்களின் சத்தம் மட்டும்தான் கேட்டது அவனுக்கு. ஓடிவந்த வேகத்தில் கையிலிருந்த கிரிக்கெட் மட்டையால் ஒரே அடி அடித்தாhன் வீரா அவளை. வேகமாக சீறிக்கொண்டு ஓடினாள். பின்னரே விஜயபாலனும் அவளை துரத்திக்கொண்டு பிடிப்பதற்காக ஓடினான்.
அப்போதுதான் அவனுக்கு சுயப்பிரக்ஞை வந்தது. அவனை அந்த ரம்பா தன் கூறிய கொம்புகளினால் முட்டித் தூக்கி ஒருபுறம் எறிந்துவிட்டளாள் என்பது புரிந்தது. ஆம் அந்த ரம்பா ராதா அக்காளின் தாய்வீட்டு சீதனமாக வந்த பசுமாடு. எனவே அதை செல்லமாக பெயர் வைத்து ஒரு பெண் பிள்ளையைப் போலத்தான் பாவித்து வந்தாள். அதற்கு மனிதர்களின் குரல் நன்றாகவேத் தெரியும். குறிப்பாக ராதா அக்காவின் குரல் நன்கு பரிச்சயம். அவள் வந்து எங்கிருந்து கூக்கரல் இட்டாலும் ரம்பா காதுகளை அசைத்துக் கொண்டு எங்கே மேய்ச்சலுக்கு சென்றிருந்தாலும் வந்துவிடும். அவிழ்த்துவிட்டு தானான மேய்ந்துவிட்டுவரும் அளவிற்கு விஜயபாலன் பழக்கி வைத்திருந்தான். என்ன இருந்தாலும் அது மாடு இல்லையா, அதன் மிருகத்தன்மையை அவனிடம் வெளிப்படுத்தி அத்தனை ஆசையோடு தொட்டுப்பார்க்க நினைத்த அவனை முட்டித் தூக்கி எறிந்துவிட்டது.
சற்று நேரத்தில் இப்படி நடந்ததும் யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. நல்லவேளை வேறு யாருமே பார்க்கவில்லை. அதுதான் அவர்களின் கவலை, நிம்மதி எல்லாம். முட்டு வாங்கியதுக்கூட ஒருபுறம் இருக்கட்டும். ஒருவேளை யாரேனும் பார்த்திருந்தால், அவனது அத்தையிடம் சொல்லி அவனது அத்தை மகன்களுக்கு அடிவிழுந்துவிடக்கூடும். அந்த வகையில் அவர்களுக்கு நிம்மதி. இருந்தாலும் ஒருவொருக்கொருவர் சத்தியம் செய்துக்கொண்டு உண்மையை வீட்டில் சொல்லக்கூடாது என்ற சபதத்துடன் சென்றனர். அப்படியே நாட்களும் கடந்தன. வீட்டில் யாருக்குமே தெரியவில்லை. ரம்பா ரகசியம் ரகசியமாகவே அவர்களுக்குள்ளாகவே தங்கிவிட்டது. ஆனால் அந்த இரவு முழுவதும் அவனுக்கு தூக்கமே இல்லை. பயம்! பீதி! அப்படியே ஒருவழியாக விடுமுறையும் முடிந்துவிட்டது.
என்ன காரணமோ அடுத்தடுத்த கோடை விடுமுறைகளுக்கு அவனால் அங்கு செல்ல முடியவில்லை. அதற்குள் அவனது மாமா வீட்டுடன் இருந்த உறவும் கொஞ்சல் விரிசல் விட்டிருந்தது. அவனும் கல்லூரி படிப்புக்காக சென்னைக்கு செல்லும்படியாவிட்டது. எனவே கோடை விடுமுறைகளில் அத்தை வீட்டிற்கு செல்வது என்பது சில வருடங்கள் இயலாமலே போனது. சென்னையில் காகிதங்களையும் சுவரொட்டிகளையும் சுரண்டி சாப்பிட்டுக் கொண்டு அழுக்காக அலையும் கால்நடைகளை பார்க்கும் போது அவனுக்கு ரம்மியமனா ரம்பா ஞாபகம் வந்துவிடும். அப்பொழுதெல்லாம் நாளடைவில் மனிதர்களுக்கும் மாடுகளுக்குமானா இடைவெளி குறைந்துவிட்டது போல உணர்வு அவனுக்கு தோன்றுவது இயல்பாகிப் போயிருந்தது. கிராமங்களில் மாடுகளை வீட்டில் ஒரு பெண் பிள்ளையைப் போலவே பாவித்து வளர்க்கிறாள் என்றால் அந்த உறவு முறையை என்னவென்று சொல்வது, மேலும் தானாக அவிழ்த்துவிட்டால் மேய்ந்து விட்;டு வீட்டிற்குத் தானான வந்துவிடும் என்றால் அதன் பகுத்தறிவையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. நாம் எப்படி நடந்துக் கொள்கிறோமோ அந்த வகையில்தான் அந்த மிருகங்களும் நம்மிடம் நடந்துக் கொள்கின்றன. இருந்தாலும் மனிதன் தான் நிலையாக வாழுவதற்கு பிற உயினங்களை பயன்படுத்திக் கொள்வது நியாயம் என்பதும் ஒரு கேள்வியாகத்தான் இருக்கிறது.
சமூக சார்பு, உணவு சங்கிலித் தொடர் இதை நியாயப்படுத்தவதாக தோன்றலாம். நம்முடைய பங்களிப்பு, பராமரிப்பு அதன் மீது எப்படி ஆரோக்கியமாக இருக்கிறது என்பது மிக முக்கியம். மனித நாகரிக தோற்றம் முதற்கொண்டு, வாகன கண்டுப்பிடிப்பு வரை என மாடுகளின் பங்களிப்பு நாகரிக வளர்ச்சியிலும் பிரமிப்புற்குரியதுதான். போற்ற வேண்டியதும்கூட!
எது எப்படியோ சுமார் ஐந்து வருடங்கள் கழித்து ஆவலுடன் ரம்பாவின் ஊருக்கு சென்றான். அனைவரும் நலம் விசாரித்தனர். எவருக்கும் ஈடுப்பாட்டோடு பதில் கூறாமால் அவன் கண்கள் அந்த ரம்பாவைத்தான் தேடின. வாங்கின முட்டுவை இன்னும் மறக்கவில்லையே! தூரத்தில் ராதா அக்கா சத்தம் போட்டுக் கொண்டே வந்தாள். அருகே சென்று விசாரித்ததில் மேற சென்ற மாடு நான்கு நாளாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும் யாNருh ஓட்டிச்சென்று விட்டார்கள் என்பதும் தெரியவந்தது. தூரத்தில் ராதா அக்கா சத்தம் போட்டுக் கொண்டே வந்தாள். அருகே சென்று விசாரித்ததில் மேய சென்ற மாடு நான்கு நாளாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும் யாரோ ஓட்டிச் சென்று விட்டார்கள் என்பதும் தெரியவந்தது. அடடா! அச்சச்சோ! என்றது மனம்.
அதற்குள் விஜயபாலன் வந்து “என்ன மாப்ள, எப்ப வந்தீங்க? ரொம்ப வருசமா ஆள காணும். விசயம் தெரியுமா? கிரிக்கெட் விளையாடும் போது, ஒன்ன கூட முட்டித்தூக்குல? நம்ம ரம்பா, எவனோ ஓட்டிக்கிட்டு போயிட்டான். பாரு வீணா அவன் முட்டு வாங்கியே சாகப் போறான்.” என்று பல வருடம் காத்த ரம்பா ரகசியத்தை அவனது அத்தை முன்னிலையில் போட்டு உடைத்தது மட்டுமில்லாமல் செய்த சத்தியம் உட்பட முழுவிவரத்தையும் விளக்கியும் கூறிவிட்டான்.
எச்சரிக்கையாகவே அத்தை மகன்கள் அனைவரும் ஓட்டம் பிடிக்கத் துவங்கிவிட்டனர். அதற்குள் அருகில் கிடந்த கல்லையும் கட்டியையும் அவர்களின் மீது வாறி எறிந்தாள், என்னவோ அன்றுதான் அந்த நிகழ்வு நடந்ததுப் போல! அவர்களும் அவளை வவ்டவண்டி காட்டிக்கொண்டே ஓடினார்கள். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அத்தை உட்பட யாருமே இன்னும் மாறவே இல்லை என நினைத்துக் கொண்டான். அந்த வெகுளித்தனம் அவனுக்குள்ளும் இருக்கிறதா என்று நொடிப்பொழுதில யோசித்துப் பார்த்துவிட்டான். “ஊ… ஊ… ஊ…. ஊ….” என்று ஒவ்வொரு கல்லிருந்தும் தப்பித்து ஓடிக்கொண்டே இருந்தார்கள். அத்தை கல் வீசியதில் எதோ சாமர்த்தியம் இருப்பதாக அவனுக்கு தோன்றிது. அதை நினைத்து சிரித்துக் கொண்டான். தன் பிள்ளைகளின் சாமர்த்தியத்தை எண்ணி அவளும் சிரித்தாள்.
ரம்பாவை பறிக்கொடுத்த ராதா அக்கா அவர்களை தூரத்திலிருந்து ஒருவித சந்தேகப் பார்வை பாhத்துவிட்டு, “நாம மாட்;ட காணும்னு அலைஞ்சி தோஞ்சி வர்றோம். கும்மாளமா சிரிப்பா?” என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள். வெளியில் சொல்ல அவளுக்கு ஏனோ தோன்றவில்லை. ஆனாலும் சிறிது நேரத்தில் வீட்டு வாசலில் காலை நீட்டிப் போட்டு அமர்ந்தவள், “ஆனைக்கு ஒரு காலம் வந்தா… பூனைக்கு ஒரு காலம் வராமலா போயிடப் போவுது… சிரிங்கடி… சிரிங்க… எனக்கும் வாயிருக்கு. நான் சிரிக்காமலேவா போயிடப் போறன். மாடு மட்டும் வூட்டுக்கு வராம போவுட்டும்…. குதிரைகால்ல சீட்டு எழுதி கட்டுறேன். மத்தத அந்த நொண்டி வீரன் பாத்துக்குவான். பண்ன பாவத்துக்கு அனுபவிக்கும் போது தெரியும்.;” என்று பெருமூச்சு விட்டு எழுந்து வேறு ஒரு பக்கம் மூக்கை சிந்திவிட்டு மறுபடியும் அமர்ந்துக் கொண்டாள்.
நொண்டி வீரன் அவர்களின் குலதெய்வம். கோபக்கார கடவுள் என்ற நம்பிக்கை அந்த கிராமத்தில். நொண்டி வீரனின் சிலைக்கு எதிNரு நிற்கும் ஆள் உயர வெள்ளை சுண்ணாம்புக் குதிரைக் காலில் வேண்டுதலை சீட்டாக எழுதிக் கட்டுவதுதான் வழக்கம். அவனும் சிறுவயதில் நொண்டி வீரனிடம் வைத்த பள்ளிக்கூடத்து மதிப்பெண் வேண்டுதல்கள் நினைவில் வந்தன. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றியிருப்பதாகவே அவனுக்கு தோன்றிற்று.
அதற்குள் ராதா அடுத்த முறை ஏவளுக்கு தயாரானாள். இந்த முறை அந்த தொனியில் ஒரு ஒப்பாரி ராகத்தை ஆட்கொண்டிருந்தாள். “ஒரு அடிகூட நான் அடிச்சி வளத்தது இல்லையே! எங்கப் போயி என்ன பண்ணிட்டு இருக்க ரம்பா, அம்மாவ பாக்கனும் உனக்கு தோணவே இல்லையா”. மறுபடியும் மூக்கை சிந்திப் போட்டு முந்தியில் துடைத்துக் கொண்டாள். அருகில் சொம்பில் வைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து தொண்டையை கையால் நீவி விட்டப்படியே மொட மொடவெனக் குடித்தாள். எவ்வளவு திட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவள் தொண்டையை சரி செய்த விதத்திலிருந்து உணர முடிந்தது.
யாரோ ரம்பாவை பற்றி விவரம் தெரிந்தவர்கள்தான் மாட்டை கேராளாவிற்கு அடிமாட்டிற்காக திருடிக்கொண்டு போயிருக்க வேண்டும் என்று அத்தை மகன்கள் சொல்ல கேட்க, நெஞ்சம் ஒரு நொடி கணத்தது அவனுக்கு. ஒரு கும்பல் அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கால்நடைகளை களவாடவே அவைகளை நோட்டமிட்டு திருடி சென்று விடுவது வாடிக்கையாக அந்த பகுதிகளில் நடந்து வருகிறது என்றும் வீரா கூற அதிர்ச்சிதான் மேலிட்டது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்டசத்தில் பெற்ற மகளைப் போல் வளர்த்து வந்த ராதா அக்காவிற்கு இது தெரிய வந்தால் அவளின் மனவலி என்னவாக இருக்கும் என்பதை கற்பனைக்கூட பண்ண அவனுக்கு மனமில்லை. ரம்பாவின் அழகிய உருவம் அடிமாட்டில் சிக்கி சிதைந்திருக்க கூடாது என்று மனம் அவனை அறியாமலேயே நொண்டி வீரனை வேண்டிக் கொண்டது.
-செல்லா செல்லம்
17-07-16 இரவு 10.30 - 12.00 மணிவரை

No comments:
Post a Comment