Monday, December 7, 2020

நகரம் - Kavithai


நகரம்!


தினமும் துண்டு வாழை இலை 

நிறையாக வைத்து காக்கைக்கு 

சுட சுட வைக்கிறாள்.


வருகிறவர்களுக்கெல்லாம் வற்புறுத்தி

முகம் பார்த்து பார்த்து பரிமாறுகிறாள்.


சாப்பிட்டு முடித்த சாதத்தை தெருநாயைக்

கூப்பிட்டுக் கொட்டுகிறாள்.


மிட்சம் இருக்கும் சாப்பாட்டை பசுமாட்டிற்கும்

வைத்துவிடுகிறாள்.


எதற்கும் அனிச்சையாகவே மேலும் ஒரு கைப்புடி அரிசியை

உலையில் ஒவ்வொரு வேலையும் போடுகிறாள்.

எங்கள் கிராமத்து வீட்டில் என் அம்மாதான்!


நானோ ஒரு கரண்டி கூடுதல் சாப்பாட்டுக்காக

ஏங்கி எழுந்து வருகிறேன், 

சென்னை மாநகார 

அளவுசாப்பாடு கடைகளில்!


அம்மாவை நினைத்துக் கொண்டுதான்!

அறியாமலேயே கண்ணீரும் வந்துவிடுகிறது.


அளவு சாப்பாடு முடிந்து வைக்கும் ஒவ்வொரு

கரண்டி கூடுதல் சாப்பாடுக்கும், ஒவ்வொரு பத்து ரூபாய் 

எனும் போது அடுத்த வேளை சாப்பாட்டிற்காக 

வைத்திருக்கும் அந்த பத்து ரூபாயின் மதிப்பு நகர்வாழ்

ஒண்டிக்குடித்தன இளைஞர்களுக்கு வேலைதேடும் 

படலத்தில் பத்து லட்சம்தான்!


இத்தனைக்கும் கூலிக்கான வேலையாகவே இருந்தாலும் 

கிராமத்தில் அப்பா நெற்பயிரைத்தான்

விழுந்து விழுந்து கவனித்து வருகிறார்.


பிள்ளைகளைப் போல உருவாக்கி இந்த

நகரத்து கடைகளுக்கு அனுப்புவதற்காக!


-செல்லா செல்லம்.


ஜீலை 25, 2016.




இந்த கவிதை உங்களுக்குள் உணர்த்தும் கருத்துக்களை, நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை கீழே உள்ள "Comment box"இல் பகிரவும்.  
இந்த கவிதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவும் என்று தோன்றினால்,  தவறாமல் பகிரவும். 
நன்றி!!! 

11 comments:

Unknown said...

Great words. Felt too emotional. Way to go bro 😍

Unknown said...

அருமையான பதிவு 💯✌

Unknown said...

பலரின் ஆரம்ப வாழ்க்கையை நினைவுகூறும் அழகிய கவிதை, என்னை உட்பட!
அருமை குருநாதா 😍

Anonymous said...

அழகு��

Jayanthi said...

கவிதை அற்புதம்! கிராமத்து பெண் என்றாலே ! தனி சிறப்பு உண்டு... அந்த தாயின் மனதில் ஓடும் எண்ணம்-( தன் மகன் பசியின்றி வாழ வேண்டும் ...தாம் செய்யும் தர்மம் தன் மக்களை காக்கும்....) இந்த மாதிரியான தாய் கிடைக்க தாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்... எண்ணங்களில் சஞ்சலம் இல்லா தாயின் பிள்ளைகள் என்றுமே நற் மதிப்பை பெறுவார்கள்.... இன்றும் ஒவ்வொரு விவசாயி பிள்ளைகள் சரிவர போதமான உணவு கிடைக்காமல் வாழ்கின்றனர்...... பணம் மீது கொண்ட மோகத்தால் உழைப்பில்லாத முதலாளிகள் உரிமையோடு உணவு பொருள்களின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்... இதுதான் இன்றைய நிலை...

C.Manoj said...

மிகவும் அருமையான பதிவு.👌👍👍

Unknown said...

Vivasayin paiyanaye 10 ruba kaasuku kanaku pathu sapudra nilamai - worst uh🔥🥺

#Sellaism

Unknown said...

அருமையானா கவிதை சூப்பர் தம்பி அம்மாவின் அருமை தெரியாதவருக்கு இக் கவிதை பொருந்தும்

Visalatchi said...

Good content❤❤

Visalatchi said...

Ulaguke sooru podum vivasaie magan kannil kanavodu nenjil latchiyathai sumanthu alavukadai sappatil.. Napagam varum ammavin nigam.. .kodumai sir arumaiyana pathivu..👌👌👌👌

Unknown said...

Super da nanba

சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும் " ஆக" உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் ...