கருப்ப்பரஅ அனுப்பி கொஞ்சம் கூட்டிவர சொல்லும் ஐயா
கருப்ப்பரஅ அனுப்பி கொஞ்சம் ஏத்தி விட சொல்லும் ஐயா
கருப்ப்பரஅ அனுப்பி கொஞ்சம் ஏத்தி விட சொல்லும் ஐயா
சாமிஈ சாமி சாமி
சாமி சத்தியமா இந்த மலையில் ஏற சக்தி இல்லை ஐய்யப்பா
சாமி சத்தியமா இந்த மலையில் ஏற சக்தி இல்லை ஐய்யப்பா
நானும் ஏறி வருவது எந்தன் புகழில்ல
உந்தன் கருணை அய்யப்பா...
உந்தன் பெருமை அய்யப்பா...
இன்னும் எத்தன தூரம் அந்த பம்பா என்று கேட்டு வரோம் ஐய்யப்பா...
இன்னும் எத்தன தூரம் அந்த பம்பா என்று கேட்டு வரோம் ஐய்யப்பா...
எருமேலி எறங்கியதும் என்னமோ சந்தோஷம்
பேட்டத்துள்ளி ஆடும் போது உள்ளுக்குள்ள ஒளி வீசும்
பெரும்பாத தொடங்கும் போது பேரின்பம் உண்டாகும்
நந்தவனம் தாண்டும் போது நம்பிக்கையும் கூடிப் போகும்
அழுதையில குளிக்கும் போது சவுட்ட மனம் ஆவல் கூடும்
அழுத மலை எறும் போது அழுக வந்து அடச்சி போகும்
கரி மலய கடக்கும்போது காலு ரெண்டும் கடுத்துப் போகும்
இன்னும் இன்னும் எத்தன தூரம் அந்த பம்பா என்று கேட்டு வரோம் ஐய்யப்பா...
இன்னும் எத்தன தூரம் அந்த பம்பா என்று கேட்டு வரோம் ஐய்யப்பா...
பம்பையில நீராட மெல்ல மெல்ல பாவம் செல்லும்
நீலிமலை ஏறும் போது நின்னு நின்னு மூச்சு வாங்கும்
சன்னிதானம் நெருங்கும்போது சட்டுன்னு தான் கோஷம் வரும்
பதினெட்டு படியேற பட்ட துன்பம் எட்ட போகும்
தரிசனம் காணும் போது வேற என்ன கேட்கத் தோணும்
சாமி சத்தியமா இந்த மலையில் ஏற சக்தி இல்லை ஐய்யப்பா...
நானும் ஏறி வருவது எந்தன் புகழ் இல்ல
உந்தன் கருணை அய்யப்பா...
உந்தன் பெருமை அய்யப்பா...
கருப்ப்பர அனுப்பி கொஞ்சம் கூட்டிவர சொல்லும் ஐயா
கருப்ப்பர அனுப்பி கொஞ்சம் ஏத்தி விட சொல்லும் ஐயா
கருப்ப்பரஅ அனுப்பி கொஞ்சம் ஏத்தி விட சொல்லும் ஐயா